(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு அவன் சமையல் செய்றப்ப பார்க்கலாம்னு பார்த்தா மத்தவங்க விடமாட்டேங்கறாங்க, இன்னிக்கு எப்படியிருந்தாலும் பார்த்துடனும்” என நினைத்தவள் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு முன்வாசல் பக்கம் வராமல் பின் வாசல் பக்கம் வர அந்நேரம் கொம்பனின் தாயோ அவனிடத்தில் பேசியபடியே வந்தார்

  

”அவ்வளவுதான் மகனே, சமையல் எல்லாம் ஒண்ணும் பெரிய கஷ்டம் இல்லை, பார்த்தியா எவ்ளோ சட்டுன்னு நீ கத்துக்கிட்ட, கற்பூர புத்திடா உனக்கு”

  

”ஆமாம்மா நான்கூட நினைச்சிப் பார்க்கலை, என்னால இந்தளவுக்கு சமையல் செய்ய முடியும்னு, எல்லாம் உன்னாலதான்மா, நீ மட்டும்  எனக்கு சொல்லிக் கொடுக்காம போயிருந்தா நான் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன்”

  

”சரிடா நான் கிளம்பறேன் வழக்கம் போல ராத்திரிக்கு நான் பின் வாசல் வழியா வந்துடறேன், நீ என்ன சாப்பிடனும்னு ஆசைப்படறியோ அதையே செய்துடலாம் நான் சொல்ல சொல்ல நீ அப்படியே செய் சரியா“

  

”சரிம்மா பார்த்துப் போ”

  

”நான் என்னை பார்த்துக்கறேன்டா நீ உன்னைப் பார்த்துக்க“

  

”சாப்பிட்டுப் போன்னு சொன்னா கேட்க மாட்டேங்கற”

  

”முறையா வந்து ஒரு நாள் சாப்பிடறேன், இப்படி யாருக்கும் தெரியாம வந்து சாப்பிடறது அவ்ளோ நல்லாயிருக்காது மகனே”

  

”அதுக்கென்னம்மா ஒரு நாள் பாரு நானே உனக்கு அப்பாவுக்கு ஏன் ஊருக்கே விருந்து சமைச்சிப் போடறேன்”

  

”அப்படியா ராசா சந்தோஷம் இது போதும் எனக்கு, மனசு குளிர்ந்துடுச்சி” என சொல்லிக் கொண்டிருக்க கோபத்தில் காவேரியோ கைகளை தட்டினாள் சத்தமாக, அந்த சத்தம் கேட்டு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.