(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

என்னவோ அவனை எடுபிடி ஆள் போல தானே ட்ரீட் செய்துட்டு இருந்த! ஒருவேளை அவனுக்கே இப்போ கண்ணு திறந்திடுச்சோ என்னவோ?”

  

மீண்டும் கற்பகம் குத்தலாக சொல்லவும்,

   

ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க? நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்? ஏன் எப்போவும் என் கிட்ட மட்டும் இப்படியே பேசுறீங்க?” என மனதில் தோன்றிய கேள்வியை நேரடியாகவே கேட்டாள் பாரதி!

  

கற்பகத்திடம் இப்போது கோபம் எட்டிப் பார்த்தது!

   

அது தானே, என்ன இன்னும் என்னை எந்த குறையும் நீ சொல்லலியேன்னு பார்த்தேன்! அம்மா மகராசி, நீ எந்த தப்பும் செய்யலை, தப்பு எல்லாம் என் மேலேயும், என் மகன் மேலேயும் தான்... உன்னை நான் இனிமேல் ஒரு வார்த்தையும் சொல்லலை...”

  

அத்தை, என்னன்னு புரியாம...”

  

பதில் சொல்ல தொடங்கிய பாரதி, உமா அமைதியாக இருக்குமாறு சைகை செய்வதை பார்த்து பேச்சை பாதியில் நிறுத்தினாள்.

  

அப்போது, “என்னம்மா இங்கே ஒரே சத்தம்? எப்போவும் சிரிப்பு சத்தம் கேட்கும் இன்னைக்கு என்ன?” எனக் கேட்டுக் கொண்டே விவேக் அங்கே வந்தான்!

  

பாரதியை சூடாக ஒரு பார்வை பார்த்த கற்பகம்,

  

என் கிட்ட ஏன் கேட்குற விவேக்? அது தான் நீ விரும்பி கல்யாணம் செய்து கிட்ட பாரதி இங்கே தானே இருக்கா, அவக் கிட்டேயே கேளு! நான் ஏதாவது சொன்னால் அப்புறம் அதுவும் தப்பா போயிடப் போகுது...” என்றாள் கோபத்துடன்!

  

என்ன நடக்குது இங்கே?” என்று பாரதியை பார்த்து கிட்டத்தட்ட உறுமினான் விவேக்.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.