(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அவனை நிதானமாக நேராக பார்த்த பாரதி,

  

எனக்கும் தான் புரியலை. உங்களுக்கு ஆஃபீஸ்ல வேலை அதிகமான்னு கேட்டுட்டு இருந்தேன்... நீங்க வந்தப்போ கேட்டது என் குரல் இல்லை தானே?” என்றாள்.

  

கற்பகத்திற்கு இப்போது பொல்லாத கோபம் வந்தது!!!!

  

பார்த்தீயா விவேக், நீ இருக்கும் போதே என்னைப் பார்த்து எப்படி நக்கலா பேசுறான்னு? அப்படி என்ன தான் உனக்கு இவக் கிட்ட பிடிச்சதோ?”

  

அதையே தான் நானும் அவர் கிட்ட கேட்கிறேன்... உங்களுக்காகவாவது அவர் பதில் சொன்னால் சரி தான்... ஆ...”

  

விவேக் அறைந்த அறையில், வலி தாங்க முடியாது, கன்னத்தை பிடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் பாரதி. அவன் அவளை அடித்திருக்கிறான் என்பதை அவளால் நம்பக் கூட முடியவில்லை!!!

   

நடந்த நிகழ்வின் தாக்கத்தினால் உமா அதிர்ச்சியில் எழுந்து நிற்க, கற்பகம் மட்டுமல்லாமல், ஆஃபிஸ் செல்ல கிளம்பி வந்திருந்த நிரஞ்சனும் கூட திகைத்துப் போயிருந்தார்கள்!

   

விவேக் இப்போதும் கோபத்துடன் தான் இருந்தான்... அந்த கோபத்துடனே பாரதியிடம்,

  

எங்கே யார் கிட்ட எப்படி பேசுறதுன்னு இல்லை? உன்னை போல தானே அண்ணியும்? அவங்க இப்படி எல்லாம் பேசி பார்திருக்கீயா நீ? பெரியவங்களுக்கு மரியாதையை தரனும் என்பதை கூடவா நான் உனக்கு சொல்லி தரனும்? ச்சே, உன் மூஞ்சியில் முழிச்ச நாள்ல இருந்து என் நிம்மதியே போச்சு...” என மட மட என பொரிந்து தள்ளி மீண்டும் கையை உயர்த்தவும்... இந்த முறை அவனின் கை அவளின் மேலே படும் முன் பாரதியின் கை அவனின் கையை உறுதியுடன் பிடித்து தடுத்தது...

   

பாரதி அதை யோசித்து திட்டமிட்டு செய்தாள் என்றெல்லாம் சொல்ல முடியாது... பல

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.