(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"நான் அம்மா கிட்ட பொறுமையா பேசுறேன் உமா... ஆனால், விவேக் பாரதி விஷயத்தில நீ தலைப் போட வேண்டாம்... இது அவங்க பர்சனல் விஷயம்..." என்றான் மெல்லியக் குரலில்...

   

"நாம எல்லோரும் இருக்கும் போது அவர் அப்படி நடந்துக்குறார்... அது உங்களுக்கு பர்சனல் விஷயமா தோணுதா???" என உமா கேட்டுக் கொண்டிருக்கும் போதே பாரதி மாடியில் இருந்து இறங்கி வந்தாள்...

   

உமாவின் கவனம் அவள் பக்கம் சென்றது... பாரதியின் முகத்தில் இருந்து எதையும் அவளால் ஊகிக்க முடியவில்லை...

   

உமாவின் அருகே வந்ததும், கிளம்புகிறேன் என முணுமுணுத்துவிட்டு கிளம்பி சென்றாள் பாரதி!!!

  

உமா இப்போதும் அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீண்டிருக்கவில்லை... விவேக்கின் நடவடிக்கைகளில் இருந்த திடீர் மாற்றம் அவளுக்கு புரியாத புதிர் என்றால், பாரதியின் நடவடிக்கை அவளுக்கு வியப்பைக் கொடுத்தது! பாரதி அழவுமில்லை, கோபப்படவுமில்லை, புலம்பவுமில்லை!!! பவித்ரா பலமுறை பாரதி வித்தியாசமானவள் என்று சொன்னதன் அர்த்தம் ஏதோ கொஞ்சம் புரிவது போல அவளுக்கு தோன்றியது...

  

🌼🌸❀✿🌷

   

அன்று இரவும் விவேக் தாமதமாக தான் வீட்டிற்கு திரும்பினான்... நாள் முழுக்க சரியாக சாப்பிடவில்லை என்றாலும் அவனுக்கு பசிக்கவில்லை... உண்மையில் உணவு உண்ண அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை...

   

காலையில் பாரதியை அறைந்த வலது கை இன்னமும் வலிப்பதாக அவனுக்கு தோன்றியது. அவனுக்கே அப்படி என்றால் அடி வாங்கியவளுக்கு எப்படி வலிக்கும்? பாவம்...

   

அந்த வலியிலும் அவள் அவனின் கையை தடுத்து பிடித்த விதம் நினைவுக்கு வந்து அவனின் மனதை வருடிச் சென்றது... பாரதி, என்ன மாதிரியான ஒரு பெண்...

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.