(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

இது பிடிக்கும் அது பிடிக்காதுன்னு எதுவும் இல்லை, அதனால நான் மொத்தமா சமைச்சிட்டேன், இதையே நானு வேங்கை அவனோட அப்பா சாப்பிடுவாங்க”

  

”ஓஹோ அப்படியா அப்ப எனக்கு வேலை மிச்சம், ஒரே சமையல் செய்துட்டாலே போதும்ல அத்தை நம்ம வீட்டாளுங்க சாப்பிடுவாங்கள்ல”

  

”ஆமாம்” என்றார் மகிழ்ச்சியாக மஹதியோ வேண்டுமென்றே ஜானகியிடம்

  

”அக்கா” என அழைக்க ஜானகி முதலில் வியந்தாலும் பின் மங்களம் இருப்பதால் சற்று வெறுப்புடன் பேசலானாள்

  

”என்ன அக்கா நொக்கானுக்கிட்டு” என்றாள் வெறுப்பாக

  

”இல்லை அக்கா உங்க மூர்த்தி மாமாவுக்கு பிடிச்சதை சமைச்சி வைச்சிட்டீங்களே சரி பரவாயில்லை அவரோட அப்பா அம்மாவுக்கு சேர்த்து சமைக்கலையா நீங்க”

  

”நான் ஏன் அவங்களுக்கு சமைக்கனும்”

  

”என்னக்கா இப்படி பேசறீங்க எதிர்காலத்தில நீங்க மூர்த்தி வீட்டுக்கு மருமகளா போனா சமைக்கனும்ல”

  

”சே சே நான் தனிக்குடித்தனம் போயிடுவேன்” என சொல்லிய நேரம் மூர்த்தியின் பெற்றோர் வந்து சேர்ந்தனர்

  

”போவ போவ எப்படி போவன்னு நாங்களும் பார்க்கிறோம்” என்றார் செல்வம் கோபமாக  அவரின் வரவை அறியாத ஜானகியோ திருதிருவென விழித்தபடியே

  

”அது வந்து மாமா நான் சும்மா ஜோக் அடிச்சேன்” என சொல்ல மூர்த்தியின் தாய் பரிமளாவோ

  

”ஜோக்குக்கு கூட இது போல பேசி வைக்காத, அது என்ன மூர்த்திக்கு மட்டும் நீ சமைச்சி வைக்கறது, அப்ப நாங்க என்னத்த சாப்பிடறதாம், நாங்களும் அவனை பெத்தவங்கதானே

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.