கடுமையாகச் சொல்ல அதைக்கேட்டு மென்மையாக சிரித்த மஹதியோ
”வேங்கையன்தான் என் உலகம்னு வந்துட்டேன் அவர் இல்லாம நான் போக மாட்டேன்“
”என் மருமகள்னா அது ஜானகி மட்டும்தான்”
”ஆனா அவளுக்கு இங்க வாழ பிடிக்கலையே”
”அதுக்காக அவளை விட்டுட முடியுமா என்ன, அவள் வேங்கையனோட பொஞ்சாதி இப்படி அடுத்தவ வாழ்க்கையை கெடுக்க நினைக்கறியே நீயெல்லாம் ஒரு பொண்ணா”
”வேங்கையன் வாழ்க்கையை நாசமாக்க கூடாதுன்னு வந்தேன், ஜானகிக்கு மூர்த்தி இருக்காங்க அப்ப வேங்கையனுக்கு யாராவது இருக்கனும்ல, அது ஏன் நானா இருக்க கூடாது”
”வேண்டாம் உன்னைப் பார்த்தா நல்ல குடும்பத்து பொண்ணு போல தெரியுது, தேவையில்லாம இங்க வந்து உன் பேரை கெடுத்துக்காத, நாளைக்கு காலையில உன்னை பஸ் ஏத்திவிடறேன், பத்திரமா ஊர் போய் சேரு” என உறுதியாக சொல்லிவிட்டு அவர் சென்றுவிட மஹதிக்கு திக்கென்றது
”என்னது இவர் பேசறதைப் பார்த்தா சொன்னதை செய்வார் போல இருக்கே, என்ன செய்யலாம்” என பலமாக யோசிக்க அந்நேரம் வேங்கையன் வந்தான்
”இந்தா நீ கேட்ட கேசரி”
”ஓ எப்படியோ கேசரி செஞ்சிட்டீங்க போல”
”ஆமாம் அம்மாகிட்ட கேட்டு கேட்டு செய்தேன்“
”வாசனையே பிரமாதமா இருக்கே”