”சாப்பிட்டு பாரு நல்லாயிருக்கும்”
”எப்படி அவ்ளோ உறுதியா சொல்றீங்க”
”உனக்கு கொடுக்கறதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் ருசி பார்த்தேன் நல்லாயிருந்தது”
”என்னது நீங்க ருசி பார்த்தீங்களா இது அநியாயம்”
”அப்படியில்லை ஒருவேளை அது மோசமா இருந்தா அதை எப்படி உனக்கு தர்றது சொல்லு”
”அது படுகேவலமா இருந்தாலும் சரி நான் விரும்பி சாப்பிட்டிருப்பேன் ஏன்னா அது நீங்க செஞ்சதாச்சே”
என சொல்ல அவனோ மென்மையாக சிரித்தான்
”நீங்க ரொம்ப அழகா சிரிக்கறீங்க” என சொல்லியவள் அவனையும் கடந்து ஜானகி நிற்பதைப் பார்த்து வியந்து சட்டென வேங்கையனிடம்
”எனக்கு ஊட்டி விடுங்க” என சொல்ல அவனோ திடுக்கிட்டு
”நானா“
”நீங்களேதான்” என சொல்லி அவள் கண் சிமிட்ட அவன் புரிந்துக் கொண்டான்.
காரணம் அவன் கேசரி செய்வதை உன்னிப்பாக ஜானகி பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்திருந்தான், கண்டிப்பாக அவள் தன் பின்னால் இருப்பதை உணர்ந்தவன் மஹதியைப் பார்த்து புன்னகைத்து
”அதுக்கென்ன நான் ஊட்டிவிடாம வேற யார் ஊட்டிவிடுவா நானே ஊட்டிவிடறேன்” என சொல்ல மஹதியும் வாய் திறக்க அவளுக்கு ஊட்டிவிட அந்த கண்கொள்ளா காட்சியை அந்த