வீட்டில் இருந்த அனைவருமே கண்டார்கள்
சிலருக்கு வயிறு எரிந்தது சிலருக்கு, சந்தோஷம் நிலவியது. ஜானகிக்கு மட்டும் வெறுப்பாக இருந்தது, அவளின் முகமாற்றத்தை கவனித்த மஹதியோ கேசரியை வேங்கையனுக்கு ஊட்டிவிட அவனும் சாப்பிட்டான்.
இருவரின் அன்னியோன்யத்தைக்கண்டு அனைவருமே வாய் பிளந்தார்கள்.
இரவு உணவுக்காக மங்களம் சமையல் செய்துக் கொண்டிருக்க அவ்விடம் ஜானகி இருந்தாள் அலுத்துக் கொண்டே உதவி செய்தாள், அதைக்கவனித்தபடியே வந்த மஹதியோ
”அத்தை” என அன்பாக அழைக்க அவரோ புன்னகையுடன்
”வாம்மா சின்ன மருமகளே வா” என அழைக்க அவளோ
”என்ன செய்றீங்க அத்தை”
”ராத்திரி சாப்பாடு செய்றேன்மா”
”அப்படியா பரவாயில்லையே ஏகப்பட்ட வெரைட்டி செய்திருக்கீங்களே”
”பின்ன இப்ப ஆளுங்க அதிகமா இருக்காங்கள்ல, அதான் யாருக்கு என்ன பிடிக்குமோ அதை அவங்க சாப்பிடுவாங்க” என சொல்ல உடனே ஜானகி
”என் மூர்த்தி மாமாவுக்கு என்னென்ன பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் அதை நான் சமைச்சி வைச்சிட்டேன்”
”அப்படியா அப்படின்னா நான் வேங்கையனுக்கு என்ன பிடிக்குமோ அதை சமைச்சி வைக்கலாமா அத்தை” என கேட்க மங்களமோ வியந்து
”வேங்கையனுக்கு பிடிச்சதா நாங்க எல்லாருமே ஒரே மாதிரிதான் சாப்பிடுவோம், ஒருத்தருக்கு