(Reading time: 24 - 48 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”ஏன் சொல்ல மாட்ட காலையில ஒரு பிரச்சனை செய்ற அதோட விடமாட்டியா நீ இனிமேல ஒரு நாளைக்கு ஒரு பிரச்சனை செய்”

  

”ஏன் என்னாச்சி”

  

”ஈவ்னிங் என்ன பிரச்சனை உன் காலேஜ்ல”

  

”ஒண்ணுமில்லை புது சர்குலர் வெளியிட்டேன், அதுல மறுபடியும் மாணவர்கள் ஸ்ட்ரைக் பண்ணாங்க அதை சமாளிச்சேன்”

  

“சர்குலரா என்னது அது”

  

”இனிமேல சனி ஞாயிறு கூட காலேஜ் நடக்கும், வர்றவங்க வாங்கன்னு சொல்லிட்டேன்” என்றாள் வெகு இயல்பாக

  

”ஏய் உனக்கு மனசாட்சியே இல்லையா பாவம்டி மாணவர்கள் சனி ஞாயிறு கூடவா”

  

”2 மாசத்துல முழு பாடத்தையும் சொல்லிக் கொடுக்க முடியாதுன்னு ஆசிரியர்கள் சொன்னதால இந்த முடிவு எடுத்தேன்”

  

”சரி சனிகிழமை வரைக்கும் வைச்சிக்கோ ஞாயிறு கூடவா வேணாம்டி”

  

”வெறும் 2 மாசத்துக்குதான் இந்த செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சதும் பழைய படி காலேஜ் ஒர்க்கிங் டேஸ்ல நடக்கும் அதையும் நான் சொல்லிட்டேன்”

  

”மாணவர்கள் கொதிச்சிருப்பாங்களே”

  

”ம் பயங்கரமா, எல்லா மாணவர்களும் பிரின்சிபால் அறைக்கு வெளிய கூடி ஒரே கூச்சல் அப்புறம் அவங்களை கட்டுப்படுத்தி அனுப்பிட்டேன்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.