”எனக்கென்னவோ அவங்க சனிக்கிழமை வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன் அப்படியே சில மாணவர்கள் வந்தாலும் நிச்சயமா ஞாயிறுக்கிழமை காலேஜ்ல ஒருத்தனும் இருக்க மாட்டான் நீதான் வெட்டியா அங்க போய் ஈ ஓட்டுவ”
”இல்லை மாதவி என் உள்மனசு சொல்லுது மாணவர்கள் கண்டிப்பா வருவாங்க“
”சரி பந்தயம் வைச்சிக்கலாமா”
”பந்தயமா என்ன பந்தயம்”
”நீ சொன்ன மாதிரி மாணவர்கள் காலேஜ்க்கு வரலைன்னா என் ஆசைப்படி ஒரே ஒரு நாள் நீ என்னோட மாடர்ன் உடையை உடுத்தனும்”
”இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்”
”உன்னை மாடர்ன் உடையில பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை எனக்கு வீட்டுக்குள்ள மட்டும் போட்டுக்காட்டு போதும்”
”ஓ அப்படியா அப்படின்னா சரி நான் சொன்ன மாதிரி சனி ஞாயிறுகள்ல காலேஜ் நடந்தா நீ புடவை கட்டிக்கனும்”
”ப்ச் ஏய் பழிவாங்காத”
”என்னை சொன்னல்ல உன்னையும் புடவையில பார்க்கனும்னு ஆசையா இருக்கு” என சொல்ல அவளோ புடவை என்றதும் ஏதோ நினைவுக்கு வந்தது போல கண்ணகியை அழைத்துக் கொண்டு படுக்கையறையில் அமர வைத்து அவளின் முன் தான் வாங்கி வந்த புடவைகளை அடுக்கினாள்.
”ஏதுடி இது”