”என்னை நான் பார்த்துக்கறேன் என்னை நினைச்சி நீ கவலைப்படாத ஆமா நாளைக்கு என்ன பிரச்சனை பண்ணலாம்னு இருக்கே“
”பிரச்சனையா”
“வீட்ல இல்லை காலேஜ்ல”
”நான் எதையும் திட்டம் போட்டு செய்யலை மாதவி அதுவா நடக்குது”
”இதப்பாரு இப்பவே நீ ஓவரா நடந்துக்கிட்ட, இப்படியே நீ தினம் தினம் ஏதாவது ரூல்ஸ் போட்டுக்கிட்டு இருந்தேன்னு வையேன், அப்புறம் உனக்கு கஷ்டம் வந்துடும் கொஞ்சம் ஆற போடு ஒரு வாரம் விடு, எதையும் கண்டுக்காத அப்புறம் வேணா பாரு”
”அதெப்படி விடமுடியும்“
”இப்படியே நீ எல்லாரையும் டார்ச்சர் பண்ணா அப்புறம் உனக்கு ஆபத்து வந்துடும் அவங்களுக்கும் கொஞ்சம் டைம் கொடு திருந்தட்டும்”
”அப்படியா சொல்ற“
”ஆமாம் ஒருவாரம் ப்ளீஸ்” என சொல்ல கண்ணகி சந்தேகத்துடன் மாதவியை உற்றுப் பார்க்க அவளோ
”புது ப்ராஜெக்ட் ஒண்ணு வந்திருக்கு அதை முடிக்கனும், நீ பாட்டுக்கு அங்க பிரச்சனை பண்ணா அப்புறம் என் முதலாளி என்னை வேலை செய்ய விடாம தன் கஷ்டத்தை என்கிட்ட சொல்லி புலம்புவாரு, இதனால என் வேலை கெடும் அதுக்குதான் சொல்றேன், என்னோட ப்ராஜெக்ட் முடியறவரைக்கும் அமைதியா இரு கண்ணகி, ப்ளீஸ்டி நான் உன் தோழிதானே ப்ளீஸ்” என கெஞ்ச கண்ணகிக்கு சிரிப்பே வந்தது
”சரிடி ஒரு வாரம் என்ன 2 வாரத்துக்கு நான் அமைதியா எந்த பிரச்சனையும் செய்யாம நான்