(Reading time: 24 - 48 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

உங்களோட ஈகோ விட்டுட்டு நேரா என்னை பாராட்ட மாட்டீங்க, உங்க மனசை புரிஞ்சிக்கிட்டதால நானே உங்க பாராட்டை ஏத்துக்கிட்டு நன்றி சொன்னேன்”

  

”ப்ச் அதெல்லாம் இல்லை வீணா கற்பனை கட்டாத போ போய் வேலையை பாரு”

  

”எஸ் சார்” என சொல்லிவிட்டு அவள் சென்றாள்

  

கோவலனுக்கு நடப்பது ஆச்சர்யமாக இருந்தது, அவனும் வேலைக்கு சென்றான் அங்கு மாதவியிடம் கல்லூரி நடக்கும் விசயத்தை வியப்புடன் சொல்ல அவளும் அவனுடன் இணைந்து வியந்தாள்

  

”ஓ அப்படியா சூப்பர்” என்றாள் அவனோ

  

”இப்ப கூட என்னால நம்ப முடியலை, மாணவர்கள் ஆரம்பத்தில எப்படியிருந்தாங்க ஆனா இப்ப புது பிரின்சிபால் சொல்றதை கேட்டு நடக்கறாங்க”

  

”அப்படியில்லை பிரின்சிபால் சொன்னதுக்காக அவங்க மாறலை அவங்களுக்கே நல்லது கெட்டது தெரியும் சின்ன பசங்களா அவங்க, வளர்ந்த பசங்கதானே, அதான் அவங்க புரிஞ்சிக்கிட்டு வந்திருக்காங்க, இதெல்லாமே செமஸ்டர் எக்ஸாம் வரைக்கும்தான் அதுக்கு அப்புறம் வழக்கப்படி வருவாங்க”

  

”எது எப்படியோ இந்த செமஸ்டர்ல எல்லா மாணவர்களும் அரியர் வைக்காம பாஸாயிடனும்”

  

”கண்டிப்பா பாஸாவாங்க நம்புங்க”

  

”நீ நம்பறியா”

  

”ஆமாம் நடக்கறதை பார்த்தா நிச்சயமா எல்லா மாணவர்களும் ஆல் பாஸாயிடுவாங்க”

  

”உனக்கு நம்பிக்கையிருந்தா அது போதும் எனக்கு”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.