”சே சே இல்லை மாதவி, நான் என்ன அப்படிப்பட்ட ஆளா, நான் கூட இந்த காலேஜை என்கிட்ட ஒப்படைச்சப்ப இதை திருத்த பல நாள் ஆகும்னு நினைச்சேன்”
”எத்தனை நாள் ஆகும்னு நினைச்ச”
”கிட்டதட்ட ஒரு வருஷம் ஆகும்னு எதிர்பார்த்தேன் ஆனா பரவாயில்லை ஒரே மாசத்துல காலேஜ் ஒழுக்கமா இருக்கு மாணவர்களும் சரியா இருக்காங்க”
”எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு கண்ணகி”
”மாதவி நீயா சந்தேகப்படற என் மேலயா கண்டிப்பா எனக்கு கர்வம் வரலை என்னை நம்பு”
”அய்யோ நான் உன்னை சொல்லலை உன் காலேஜ் பத்தி சொல்றேன்”
”புரியலை”
”நீ எதுக்கும் ஒவ்வொரு வகுப்பா போய் செக்கிங் வேலையை பாரு“
”செக்கிங்கா யாருக்கு செக்கிங்”
”மாணவர்களுக்கும் முடிஞ்சா ஆசிரியர்களுக்கும்“
”ஏன்”
”என்னவோ தெரியலை 5 வருஷமா திருந்தாத காலேஜ் ஒரே மாசத்துல திருந்துச்சின்னா நம்பற மாதிரியில்லைடி அதான் பார்க்கிறேன்”
”அப்படியா சொல்ற சரி நான் செக் பண்றேன்”