”என்ன சார் இப்படியெல்லாம் கேட்கறீங்க”
”உன் முகத்தில கலவரம் தெரியுதே, அதனால கேட்டேன் ஆமா வேலை நேரத்தில எங்க கிளம்பிட்ட”
“காலேஜ் எப்படி நடக்குதுன்னு செக் பண்ணப்போறேன்”
”செக்கிங்கா அதுக்கென்ன அவசியம் வந்தது இப்போ”
”ஒரு மாசம் ஆச்சி வகுப்புல எப்படி பாடம் நடக்குது மாணவர்கள் என்ன செய்றாங்க அதெல்லாம் பார்க்கப் போறேன்”
”இரு இரு நானும் வரேன்”
”இல்லை வேணாம் நான் மட்டும் போய் வரேன்”
”வேணாம்மா உன்னை தனியா அனுப்பினா நீ ஏதாவது பேசி வைப்ப அதைக்கேட்டு மாணவர்கள் மறுபடியும் ஸ்ட்ரைக்குன்னு வந்து நிப்பாங்க”
”அதெல்லாம் நடக்காது சார்”
“நானும் வரேன் போதுமா வா” என அழைக்க அவளும் விதியே என அவனுடன் நடந்தாள்.
முதலில் இருந்த வகுப்புக்குள் நுழைந்தார்கள் இருவரும், அது சிலம்பரசனுடையது அவனே இவர்களை கண்டு திடுக்கிட்டான், இவர்கள் வரவும் மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள். கோவலனோ சிலம்புவிடம்
”ஒரு பிரச்சனையும் இல்லையே, பாடம்லாம் முடிஞ்சதா மாணவர்கள் ஒழுங்கா படிக்கறாங்களா” என கேட்க அவனோ