(Reading time: 24 - 48 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”கண்ணகி எங்க”

  

”லாக்கப்ல”

  

”என்ன லாக்கப்லயா அவளை வெளிய எடுக்க எந்த முயற்சியும் செய்யலையா நீ”

  

”இல்லை தாத்தா என்ன செய்றதுன்னு தெரியலை”

  

”அந்த சிலம்புமேலதான் தப்புன்னு அவனை பிடிச்சிக் கொடுத்து கண்ணகியை காப்பாத்த வேண்டியதுதானே”

  

”அவனையா” என தயங்க

  

”இப்ப கூட உனக்கு உன் நண்பன்தான் பெரிசா போயிட்டானா சே, நீ இந்தளவுக்கு சுயநலவாதியா இருப்பன்னு நான் எதிர்பார்க்கலை, தப்புன்னு தெரிஞ்சும் அந்த தப்புக்கு துணை போறியே, உன் முகத்தில விழிக்கவே எனக்கு பிடிக்கலை என் கண்முன்னாடி வராத போ அப்படி“

  

”அய்யோ தாத்தா இல்லை தாத்தா அப்படியெல்லாம் இல்லை”

  

”போதும் இனி என் முகத்தில விழிக்காத, உனக்கு தந்த தாளாளர் பதவியை நான் பறிக்கிறேன், நீ கிளம்பலாம் நானே தாளாளரா இருந்து இந்த பிரச்சனையை சரிசெய்து கண்ணகியை காப்பாத்தறேன் போ இங்கிருந்து” என விரட்ட கோவலனுக்கு மனம் கேட்கவில்லை அவனோ

  

”இல்லை தாத்தா இந்த பிரச்சனை என்னோடது நான் எல்லாத்தையும் சரிசெய்றேன்”

  

”வேணாம்”

  

”தாத்தா ப்ளீஸ் தாத்தா என்னை நம்புங்க”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.