“அப்படித்தான் சொல்லிவிட்டா“
”வேணும்னே சொல்லியிருக்கா உன்னால இந்த விலையில விக்க முடியாதுன்னு அவளுக்கு நல்லாவே தெரியும்“
”அப்படியா எனக்கு இந்த வியாபாரம்லாம் தெரியாதுப்பா”
”அதுக்கென்ன விடு நானே மொத்த தேங்காயும் வாங்கிக்கிறேன்”
”வேணாம்பா உங்களுக்கு கொடுத்தேன்னு தெரிஞ்சா அதுக்கும் ஏதாவது சொல்வா” என சொல்ல அவர்களின் பேச்சைக் கேட்ட மற்ற வியாபாரிகள் கொம்பனிடம்
”இதப்பாரு கொம்பா நீ ஊருக்கு பல நன்மைகள் செய்த உனக்குன்னு வரும்போது ஊர் உதவாதா என்ன, முப்பது ரூபாய் என்ன ஐம்பது ரூபாய்க்கு நானே எல்லா தேங்காய்களையும் வாங்கிக்கிறேன் போதுமா”
”இல்லை அப்படி எதுவும் வேணாம் முப்பது ரூபாய்க்கே தந்தா போதும்”
”அட நீ ஒண்ணு, உன் செலவுக்கு பணம் வேணாமா ஒவ்வொண்ணுத்துக்கும் உன் பொண்டாட்டிக்கிட்ட கைஏந்தி நிப்பியா, இதப்பாரு நீ கொம்பன் உனக்குன்னு இருக்கற மரியாதையை நீ இழந்துடாத இந்தா பிடி பணத்தை” என கட்டுப்பணத்தை தர அவன் கண்கலங்கினான்
”கொம்பா நீ கண்கலங்க கூடாது நீ செய்த உதவிதான் இப்ப உன்னை காப்பாத்தியிருக்கு, நீ கிளம்புப்பா நானே காய்களை இறக்கி வைச்சிட்டு வண்டியை அனுப்பி வைக்கிறேன், நீ போப்பா பாரு முகமே வாடிப்போயிருக்கு சாப்பிட்டியா இல்லையா”
”இல்லை வேலை முடிஞ்சாதான் சாப்பாடு” என சொல்ல அவனின் தந்தை கலங்கியேப் போனார் சட்டென அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றார்