அதை வாங்கியபின்பு அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை சம்பளத்தை வாங்கிக் கொண்டு அவசரமாக கிளம்பியவனை தடுத்தாள்
”எங்க போற”
”எங்கம்மாகிட்ட”
”ஏன்“
”முதல் மாச சம்பளம் வாங்கியிருக்கேன் அதை தரனும்ல“
”இது ரொம்ப முக்கியமா”
”எனக்கு இதுதான் முக்கியம்” என சொல்லிவிட்டு அவன் சென்றேவிட்டான். காவேரியோ நீண்ட பெருமூச்சுவிட்டாள்.
கொம்பனும் தன் தாயிடம் தான் வாங்கிய சம்பளத்தை தர அவரோ கடலளவு மகிழ்ந்தார். அவனுக்கே 3 மடங்கு சொத்துள்ளது அதோடு பார்க்கும் போது அவன் சம்பளமாக கொண்டு வந்தது, அவனது சொத்தில் ஒரு சதவீதம்தான் அதற்கே அவனின் பெற்றோர் மனம் மகிழ்ந்து பாராட்டினார்கள்.
அந்த பணத்தை வைத்து அவன் தன் நண்பனுக்கும் நாய்க்கும் செலவுகளை செய்து திருப்தியடைந்தான். இவ்வனைத்தையும் கண்டபடி காவேரியிடம் வந்த சண்முகமோ
”எதுக்கும்மா மாப்பிள்ளையை இவ்ளோ கொடுமைப்படுத்தற”
”அப்பா இது உங்களுக்கு கொடுமை போல தெரியுதா, அவரை செல்லமா பொறுப்பில்லாம வளர்த்திருக்காங்க, அவருக்கு இப்படி இப்படி இருக்கனும்னு சொன்னா கேட்க மாட்டாரு, அனுபவிச்சாதான் அவருக்குப் புரியும், பணத்தோட அருமை பெத்தவங்க அருமை எல்லாம் புரியும், அவர்கிட்ட பணம் சொந்த பந்தம் அப்பா அம்மா எல்லாம் இருந்தும் சந்நியாசி ஆகப்