“நான் தான்னு எப்படி கண்டுப்பிடிச்சீங்க சக்தி???” ஆர்வத்துடன் கேட்டாள் சத்யா.
“யாரோ படி ஏறி வர சத்தம் கேட்டுச்சு. அப்போ பாட்டியோட பர்மிஷனோட வரவங்கன்னு தெரியும். அது நீயோ அந்த போலி டாக்டாராவோ தான் இருக்கனும். கதவை தட்டாம உள்ளே வந்தா, நீயா தான் இருக்கும்!”
“ஓஹோ, டாக்டர் கதவை தட்டிட்டு தான் வருவாரா?? பரவாயில்லையே, ஜன்னல் வழியா வராம இருக்காரே சந்தோஷம்!!!”
சக்தி எழுதுவதை நிறுத்தி விட்டு சத்யாவை திரும்பிப் பார்த்து சிரித்தாள்!
“உனக்கும் லேட்டஸ்ட் நியூஸ் கிடைச்சிருச்சா??? ஆனாலும் ஃபோன்ல பேசாம நேரா வந்திருக்க?” சக்தி கேட்ட கேள்வியின் தலைக் கால் புரியாமல விழித்தாள் சத்யா!!
“நீ முழிக்குறதைப் பார்த்தா தெரியாது போலருக்கே! என்ன டிடக்டிவ் ஆஃபிசர் இப்படி ஏமாத்திட்டீங்க???” என்றாள் சக்தி கேலி மின்ன!
“விளையாடாதே சக்தி. என்ன லேட்டஸ்ட் நியூஸ்??? யாரைப் பத்தின நியூஸ்???” பரபரப்புடன் கேட்டாள் சத்யா!
“அஹல்யா தங்கி இருந்த வீட்டுல நேத்து நைட் யாரோ திருடன் வந்திருந்தானாம் சத்யா!”
“என்னது?”
“ம்ம்ம்! உன் ஃப்ரென்ட் ஜான்சி ராணி சவீதா தான் போலீஸ்க்கு ஃபோன் செய்திருக்கா. நைட் என்னமோ சத்தம் கேட்டுச்சாம். சவீதா வெளியே எட்டிப் பார்த்தா ரோட்ல எதுவும் வித்தியாசமா தெரியலையாம். அதனால அப்போ இக்னோர் செய்திருக்காங்க. ஆனால், காலையில பார்த்தா, அஹல்யா வீட்டு கேட், கதவு எல்லாம் திறந்திருந்திச்சாம். சந்தேகப் பட்டு போலீஸ்க்கு சொல்லி இருக்காங்க. கான்ஸ்டபில் வந்து பார்த்திருக்கார். வீட்டுல பொருள்