எல்லாம் எப்படி எப்படியோ கலைஞ்சு கிடந்துச்சாம்!!”
சக்தி விவரித்ததைக் கேட்டு சத்யா முகத்தில் கலக்கம் வந்துப் போனது!
“ஐயோ! நல்ல வேளை அஹல்யாவும் அருணும் அங்கே இல்லை சக்தி. ஆனாலும் ஏன் அஹல்யா வீட்டுல போய் திருட வரணும்? அஹல்யா கிட்ட நகை பணம் எதுவும் இருக்க மாதிரி தெரியலையே. அவங்க அங்கே இல்லவும் இல்லை. விலை ஜாஸ்தியா எதையாவது அங்கேயே வச்சுட்டுப் போவாங்களா என்ன? சரியான முட்டாள் திருடனா இருப்பான் போலருக்கே!!!”
சத்யா படபட என தன் துப்பறியும் வேலையை தொடங்க, சக்தி முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது!
“யாரு வந்திருந்தாலும் எதையோ தேடி வந்திருக்குறதா தான் எனக்கு தோணுது சத்யா!”
“எதைத் தேடி???”
“அது இன்னும் தெரியலை சத்யா! சில ஐடியாஸ் வந்திருக்கு, பார்ப்போம்!!!”
“என்ன ஐடியாஸ்???”
“நமக்கு இந்த சேகரன் பத்தி தெரிஞ்சதை எல்லாம் இந்த போர்ட்ல எழுதி இருக்கேன். அதை வச்சு சில தியரி இருக்கு, அவ்வளவு தான்!”
சத்யா சக்தி காட்டிய போர்டை ஒரு வினாடிப் பார்த்தாள்!
“ஆமா, இந்த திருட்டு பத்தி உனக்கு எப்படி தெரிஞ்சது சக்தி???”
“புது இன்ஃபார்மர் கண்டுப்பிடிச்சிருக்கேன்!” சொல்லி விட்டு சக்தி சிரித்தாள்.
“சக்தி!!!”