(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

அஹல்யா சொன்னதை ஏற்றுக் கொண்டு தலை அசைத்த சத்யாவினுள் வேறு சிந்தனைகள் ஓடியது!

   

அஹல்யா சொல்வதுப் போல அவள் வீட்டில் அத்துமீறி நுழைந்தது வேறு ஊர்க்காரர்கள் இல்லையென்றால், குறிப்பாக அந்த வீட்டில் திருட வேண்டும் என்று தான் வந்திருக்க வேண்டும். ஆனால் ஏன்? எதை திருட?? சத்யா அவளையே கேட்டுக் கொண்டாள்!

  

சத்யா தன் யோசனையில் ஆழ்ந்து விட, அஹல்யா முகத்தில் சங்கடத்தின் அறிகுறி தோன்றியது!

   

“நீங்க யோசிக்குறதுப் புரியுது! நான் எங்கே போனாலும் என்னை பிரச்சனைங்க பின் தொடர்ந்து வந்துட்டே இருக்கு,” என வருத்தத்துடன் சொன்னாள் அஹல்யா.

  

தன் யோசனையில் இருந்து வெளி வந்த சத்யா, அஹல்யா தவறாக புரிந்துக் கொண்டதை உணர்ந்தவளாக, “தப்பு அஹல்யா. நான் அப்படி யோசிக்கலை! நல்ல வேளை நீங்களும் அருணும் அந்த வீட்டுல இல்லாம இங்கே இருந்தீங்களேன்னு சந்தோஷப் படுறேன்,” என்றாள்!

  

“உங்களை மாதிரி என்னாலேயும் எதுலேயும் நல்லதை பார்க்க முடிஞ்சா நல்லா இருக்கும்!”

  

“கஷ்டம்ங்குறது உங்களுக்கு மட்டும் இருக்குறது இல்லை அஹல்யா. எல்லோருக்கும் உண்டு!”

  

“நம்பவே முடியலை. இன்ஸ்பெக்டர் அப்படி எல்லாம் உங்களை வருத்தப் பட விட மாட்டார்”

  

“உண்மை தான்! இல்லைன்னு சொல்ற தன்னடக்கம் எல்லாம் எனக்கு இல்லை. ஆனால் அவரை கல்யாணம் செய்துக்குறதுக்கு முன்னாடி எங்கம்மாவை கல்யாணத்துக்கு சம்மதம் கொடுக்க வைக்க ரொம்ப கஷ்டப்பட்டோம் அஹல்யா. ப்ச், அதை பத்தி எல்லாம் யோசிக்க இப்போவும் எனக்கு பிடிக்காது!”

  

“சார் ரொம்ப நல்லவரா இருக்காரே. அப்புறம் ஏன் உனக் அம்மா சம்மதிக்கலை? ஸ்டேட்டஸ்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.