அந்த மாதிரி ஏதாவது காரணமா?”
“முக்கிய காரணம் அவரோட வேலை. அப்போ எல்லாம் அவர் காக்க காக்க சூர்யா மாதிரி இருப்பார். அம்மாக்கு அது பிடிக்கலை. அவங்க சம்மதிச்சா தான் கல்யாணம்னு இவரு ஒரு சைட் ஒரே அடம் பிடிச்சுட்டு இருந்தார்!”
“சார் பெரியவங்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்திருக்கார்!”
“ஆமா! இப்போ இந்த ஊருக்கு அவர் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வரதுக்கும் அது தான் காரணம். க்ரைம் கம்மியா இருக்க ஊருல இருக்காராம்!!”
“அவரை தொல்லை செய்ய நான் வந்து சேர்ந்திருக்கேன்!”
“அவர் அதெல்லாம் பார்த்துப்பார் அஹல்யா. நீங்க வருத்தப் படாதீங்க. இவர் இன்ஸ்பெக்டரா இருக்குறது உங்க லக்! அதே மாதிரி அபினவ் இங்கே உங்களுக்காகவே கரக்ட்டா இருக்கான் பார்த்தீங்களா! அது மட்டுமா, அவனோட அப்பா டிராமா, டையலாக்ன்னு இல்லாம இவ்வளவு ஈசியா உங்க கல்யாணத்துக்கு பச்சைக் கொடி காட்டிட்டார். மதியூர் வந்ததுக்கு அப்புறம் உங்களுக்கு நல்லது தான நடக்குது அஹல்யா. இனிமேல் எதிர்காலமும் அப்படி தான் இருக்கும்!”
“தெரியலைங்க சத்யா! நீங்க, அபினவ், சக்தி எல்லோரும் நல்லவங்களா இருக்கீங்க. ஆனால் அதுக்கு முன்னாடி இந்த ஊருல நான் சந்திச்சவங்க எல்லாம் அப்படி நல்லவங்களா இல்லை!”
“நாங்க இந்த ஊருக்கு வந்து இரண்டு வருஷமாச்சு அஹல்யா. ரொம்ப நல்ல ஊருப்பா இது!”
“இந்த ஊரு இன்ஸ்பெக்டர் உங்க கணவர் அதான் எல்லோரும் இங்க கிட்ட நல்லா நடந்துக்குறாங்க!”
“எனக்குப் புரியலையே”
“எல்லாத்தையும் சொன்னேன்னா வருஷக் கணக்காகும். செத்துப் போன சேகரன்னு இல்லை.