(Reading time: 24 - 47 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

தொடர்கதை - பூவா? தலையா? - 06 - சசிரேகா

கோவலனும் உதயமூர்த்தியும் எந்தெந்த வழிகளில் முயற்சி செய்தும் கண்ணகியை அவர்களால் வெளிக் கொண்டுவர இயலவில்லை, இதற்காக கோவலன் சிலம்புவை தேடிச் சென்றான், அவனோ காணாமல் போய்விட கோவலனுக்கு தலையே சுற்றியது. எப்படி கண்ணகியை காப்பாற்றுவது என தெரியாமல் திண்டாடினான்,

  

மாலை நேரத்தில் மாதவி வீட்டிற்குச் சென்றாள், அங்கு கண்ணகியில்லாமல் போகவே திகைத்தாள் சரி வேலையிருக்கும் என நினைத்து அமைதியானாள் ஆனால் நேரம் செல்ல செல்ல அவளுக்கு பயமே அதிகரித்தது.

  

”என்னாச்சி 9 மணி ஆகுது, இன்னுமா காலேஜ்ல வேலை பார்க்கறா, இன்னிக்கு ஏதாவது பிரச்சனையா அந்த கோவலன் கூட ஆபிஸ் பக்கமே எட்டிப்பார்க்கலையே என்னாயிருக்கும்?  கோவலன்கிட்டயே கேட்கலாம்” என நினைத்தவள் உடனே கோவலனுக்கு போன் செய்தாள்.

  

கோவலனோ பயங்கர குழப்பத்தில் இருந்த நேரம் மாதவியின் போன் கால் வரவே சற்று ஆறுதல் அடைந்தான் போன் எடுத்து பேசினான்

  

”ஹலோ மாதவி”

  

”கோவலன் ஊர்லதான் இருக்கீங்களா, என்ன ஆபிஸ் பக்கமே வரலை உங்களுக்காக நான் காத்திருந்தேன்” என சொல்ல அவன் மனதில் தென்றல்காற்று வீசியது

  

”நீ என்னை மிஸ் பண்ணியா மாதவி”

  

”ஆமாம் இப்ப கூட பாருங்க உங்க நினைப்பு வந்ததாலதானே போன் பண்ணேன் ஆமா என்ன ஏதாவது பிரச்சனையா”

  

”ஆமாம் மாதவி பெரிய பிரச்சனைதான் மண்டையே உடையுது சால்வ் பண்ண முடியலை” என்றான் வருத்தமாக

  

”அப்படி என்ன பிரச்சனை கோவலன்” என கேட்க கோவலனும் நடந்ததைச் சொல்ல

2 comments

  • தயவுசெய்து, ஹீரோ புது வாத்தியாராக வேலைக்கு வரப்போறானு கதைய மாத்திடாதீங்க

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.