கண்ணகி மென்மையாக சிரித்துவிட்டு
”அதுக்கென்ன தாராளமா உனக்கு ஆசிரியர் வேலை தரேன் போதுமா” என சொல்லியவள் ஈஸ்வரமூர்த்தியிடம்
”சார் இவளை நம்ம காலேஜ்ல சேர்த்துக்கலாமா”
”கண்டிப்பா சேர்த்துக்கலாம் இனி எல்லாமே உன்னோட பொறுப்பு, சரிம்மா நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவர் சென்றதும் மாதவி கண்ணகியிடம் அன்றைய நாள் நடந்ததை பற்றி கேட்க கண்ணகியும் நடந்ததை சொன்னாள்.
மறுபக்கம் கண்ணகியை ஈஸ்வரமூர்த்தி வெளியே எடுத்தார் என்ற செய்தி வந்ததும் கோவலன் நிம்மதியானான், வீடு திரும்பினான், அங்கு ஈஸ்வரமூர்த்திக்காக காத்திருந்தான், அந்நேரம் அவனது போனிற்கு ஒரு மெசேஜ் வர என்னவென பார்த்தான் மெயில் மூலம் வேலையை ராஜினாமா செய்ததாக மாதவி அனுப்பியிருந்தாள், அதைப்பார்த்து துடித்துப் போனான்.
”அய்யோ மாதவி ஏன்தான் இப்படி அவசரப்படறியோ, அதுசரி என்னால கண்ணகியை காப்பாத்த முடியலை அதுக்காக இப்படியா என்னை விட்டுப் போவ, இது தப்பு பொழுது விடியட்டும் உன்னை தேடி நான் வரேன், உன்கிட்ட மன்னிப்பு கேட்கறேன்” என தனக்குதானே புலம்பிக் கொண்டிருந்த நேரம் தாத்தா ஈஸ்வரமூர்த்தி வந்தார்.
முதல் முறையாக பேரன் மீது கோபம் கொண்டு அவனது கன்னத்தில் விட்டார் ஒரு அறை அந்த அறையில் ஆடிப்போனான் கோவலன்
”தாத்தா என்னை மன்னிச்சிடுங்க” என ஈனக்குரலில் சொன்னான் அவரோ
”உன்னை நம்பி நான் 2 பெரிய தப்பு செய்துட்டேன் முதல் தப்பு உன்னை நம்பி நான் காலேஜை தந்திருக்க கூடாது, அதை குட்டிசுவராக்கி விட்ட இரண்டாவது தப்பு உன்னை நம்பி கண்ணகியை விட்டது, அவளை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போய் விட்ட, இனி உன்னை நான் நம்பமாட்டேன் போதும், நீ அந்த கல்லூரிக்கு தாளாளரா இருந்தது, இனி அந்த வேலையை நான் பார்த்துக்கிறேன், இனிமேல நீ காலேஜ் பக்கம் கூட வரக்கூடாது கம்பெனி