(Reading time: 24 - 47 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

வேலைகளை பாரு”

  

”தாத்தா அப்படி சொல்லாதீங்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு வழி கிடைக்கலை அந்த சிலம்புவை நான் பிடிக்க பார்த்தேன் படுபாவி தப்பிச்சி ஓடிட்டான் இல்லைன்னா நானே கண்ணகியை காப்பாத்தியிருப்பேன்”

  

”போதும் உன் கட்டுக்கதையை நிப்பாட்டு சிலம்புவோட திட்டம் உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு அவன் உன் நண்பன்தானே உன்கிட்ட சொல்லியிருப்பானே”

  

”ஆமாம் தாத்தா சொன்னான்”

  

”அதானே பார்த்தேன், அவன் அப்படி சொல்லியும் நீ அது தப்புன்னு சொல்லி பிரச்சனையை சரியாக்காம விட்டிருக்க, பாவம் உன்னால அந்த அப்பாவி பொண்ணு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் வந்திருக்கா, அவளோட மானம் மரியாதையே போச்சி, அதைபத்தி கொஞ்சமாவது யோசிச்சியா நீ, இதே உன் இடத்தில நானா இருந்திருந்தா கண்ணகியை போலீஸ் கைது செய்றப்பவே தடுத்து நிப்பாட்டி என்னை கைது செய்ங்கன்னு சொல்லியிருப்பேன், அதுதான் ஒரு தாளாளரோட கடமை நீயும் இருக்கியே சுயநலவாதி”

  

”அய்யோ தாத்தா வார்த்தையால கொல்லாதீங்க, எனக்கே சிலம்புவோட திட்டம் அப்பதான் தெரியும் அவன் சொல்லி முடிச்சான், உடனே போலீஸ் வந்தது என்ன ஏதுன்னு பார்க்கறதுக்குள்ள எல்லாமே சட்டுசட்டுன்னு நடந்துடுச்சி தாத்தா, என்னை நம்புங்க தாத்தா”

  

”மாட்டேன் இனி உன்னை நான் எப்பவும் நம்ப மாட்டேன், உன் இஷ்டப்படி நீ ஆடு பாடு உனக்கு ஒரு தாத்தா இருக்கறதை கூட நீ மறந்துடு”

  

“தாத்தா அப்படி சொல்லாதீங்க தாத்தா, நான் பாவம் எனக்குன்னு யார் இருக்கா அப்பா அம்மா இல்லை நீங்க மட்டும்தானே”

  

”உன் அப்பா அம்மா இறப்புக்கும் நீதானே காரணம்”

  

”ஒத்துக்கறேன் தாத்தா அப்ப சின்ன வயசு நான் டிரைவர்கூட விளையாடினேன் அதுல கார்

2 comments

  • தயவுசெய்து, ஹீரோ புது வாத்தியாராக வேலைக்கு வரப்போறானு கதைய மாத்திடாதீங்க

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.