(Reading time: 24 - 47 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

ஸ்டேஷன் சென்று விசயத்தை கேட்டறிந்து நடந்த உண்மையை தெளிவாகச் சொல்லி சிலம்புவின் மீது புகார் எழுதி தந்து கண்ணகியை வெளி கொண்டு வந்தார்.

  

முதல் முதலாக கண்ணகியும் ஈஸ்வரமூர்த்தியும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டார்கள். அவளை அவரே தனது வண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார், செல்லும் வழியில் கண்ணகியோ ஈஸ்வரமூர்த்தியிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டாள்

  

”என்னை நம்பி நீங்க உங்க கல்லூரியை தந்தீங்க, ஆனா அந்த கல்லூரிக்கு அவப்பெயர் அதுவும் என்னால வந்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்க” என்றாள்

  

”இதுல உன் தப்பு எதுவும் இல்லை, யாரோ செஞ்ச சதியில நீ மாட்டிக்கிட்ட, இப்ப கூட கல்லூரி பத்தி யோசிக்கறியே தவிர உன்னை பத்தி வருத்தப்படலையா, ஒரு நாள் முழுக்க போலீஸ் ஸ்டேஷன்ல இருந்திருக்கியே, உனக்கு கஷ்டமாயில்லையா”

  

”எனக்காக வருத்தப்பட இந்த உலகத்தில யாருமில்லைங்க, என்கிட்ட உண்மையிருந்தது கண்டிப்பா நான் வெளிய வந்துடுவேன்னு நம்பினேன், என் நம்பிக்கை பொய்யாகலை” என்றாள்

  

”உனக்கு யாருமில்லைன்னு சொல்லாதம்மா உனக்கு நான் இருக்கேன்” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்துவிட்டு

  

”இனி என்ன என்னை வேலையை விட்டு எடுப்பீங்க அதானே நானே போயிடறேன்” என சொல்ல அவரோ

  

”நான் எப்ப அப்படி சொன்னேன், நீதான் அங்க பிரின்சிபாலா இருக்கனும்”

  

“இவ்ளோ நடந்தபின்னாடியும் உங்க முடிவை ஏன் மாத்திக்கலை”

  

”ஏன்னா உன்னை நான் முழுசா நம்பறேன், இவ்ளோ ஆனபின்னாடியும் மத்தவங்களா இருந்திருந்தா எங்களை குறை சொல்லி நஷ்டஈடு கேட்டிருப்பாங்க, இல்லைன்னா பழியை தூக்கி என் மேல போட்டு இருப்பாங்க, ஆனா நீ இந்த நிமிஷம் கூட கல்லூரியை பத்தி

2 comments

  • தயவுசெய்து, ஹீரோ புது வாத்தியாராக வேலைக்கு வரப்போறானு கதைய மாத்திடாதீங்க

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.