(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

சக்தி சத்யாவுக்கு பதில் சொல்லாமல் மும்முரமாக மொபைல் நோட்ஸில் நர்ஸ் சொன்ன விபரங்களை அப்டேட் செய்துக் கொண்டிருந்தாள்.

  

“பர்வீன் இப்படின்னு நம்பவே முடியலை! அந்த டாக்டருக்கு ஏன் இப்படி புத்தி போகுது??”

  

“லிட்டில் பேபி சத்யா, புலம்புறதை நிறுத்துறீயா? என்னால கான்சன்ட்றேட் செய்ய முடியலை.”

  

“ப்ச்! முடியலை சக்தி!”

  

“சவீதா சொன்னது உண்மையா இருக்கு! தேன் உன்னை வீட்டுக்குள்ளேயே பொத்தி பொத்தி வச்சிருந்தார் போலருக்கு!”

  

இந்த நேரத்தில் இந்த பேச்சு தேவையா என்பது போல சக்தியை பார்த்தாள் சத்யா.

  

“இங்கே பார் சத்யா, இந்த டிடக்டிவ் வொர்க்ல நீ இன்டர்ன் மாதிரி. கத்துக்க எவ்வளவோ விஷயம் இருக்கு!”

  

“போ சக்தி!”

  

“இங்கே பார். எல்லோரும் நல்லவங்கன்னு நீ நினைச்சதுல தப்பு இல்லை. யார் எதை சொன்னாலும் லிட்ரலா உண்மைன்னு எடுத்துக்குறீயே அது தப்பு. சிஸ்டர் டாக்டர் க்ரிஷ்ணாக்கும் பர்வீனுக்கும் அஃபேர் இருக்குன்னு சொன்னாங்க. அது உண்மையா இருக்கனும்னு என்ன அவசியம்? பொய்யா கூட இருக்கலாம்?”

  

“அப்படி பொய் சொல்லி அவங்களுக்கு என்ன கிடைக்க போகுது?”

  

“எவ்வளவோ காரணம் இருக்கலாம். டாக்டர் மேல இவங்களுக்கு கோபம் இருக்கலாம். இவங்களுக்கே டாக்டரை பிடிக்குமா கூட இருக்கலாம்!”

  

சத்யா அப்படியா என்பதுப் போல பார்த்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.