(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

தொடர்கதை - சின்ன மருமகள் - 08 - சசிரேகா

ஹதியின் பேச்சிலும் செயலிலும் வேங்கையன் மிகவும் குழம்பியிருந்தான், ஆரம்பத்தில் அவள் சொன்னது என்ன ஜானகியுடன் சேர்த்து வைப்பதாக ஆனால் இப்போது தன்னை காதலிப்பதாக சொல்லவும் அவனுக்கு மஹதி மீது வெறுப்பே வந்தது, விடிந்ததும் அவளை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என முடிவெடுத்தான், அதற்கேற்ப எப்போது விடியும் என காத்திருந்தான்.

  

பொழுதும் விடிந்தது.

  

அவசர அவசரமாக மஹதியை தேடிச் சென்றான் வேங்கையன், அவளோ பூஜையறையில் மங்களத்துடன் இணைந்து விளக்கேற்றிக் கொண்டிருக்க கோபத்தில் அவளிடம்

  

”போதும்” என்றான், அவன் கத்திய கத்தலில் அதிர்ந்து விளக்கை தட்டிவிட அது கொட்டிவிட்டது. அதை அபசகுணமாக நினைத்தார் மங்களம்

  

”அடடா என்ன இப்படி ஆயிடுச்சி இது அபசகுணமாச்சே” என அவர் வருத்தப்பட மஹதியோ வேங்கையனைப் பார்த்து சிரித்தாள், அவனோ கோபத்தில் வெடித்தான்

  

”முதல்ல வீட்டை விட்டு வெளிய போ” என சொல்ல அவளோ அதிர்ந்தாள், மங்களமோ  மகனின் பேச்சில் கோபம் கொண்டார்.

  

”வேங்கையா என்ன பேச்சு இது, யாரை வெளிய போன்னு சொல்ற”

  

”உன்னையில்லைம்மா இதோ இவளை”

  

”சின்ன மருமகளை எதுக்கு போக சொல்ற”

  

”அவள் ஒண்ணும் சின்ன மருமகள் இல்லை நடிக்க வந்தவ”

  

”வேங்கையா வார்த்தையை அளந்து பேசு மகன்னு கூட பார்க்க மாட்டேன் ஜாக்கிரதை”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.