(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”ஆமாம்மா இத்தனை நாளும் இவள் பொய்யா நடிச்சிக்கிட்டு இருந்தா, உண்மையிலயே இவளுக்கு என்னையும் ஜானகியையும் சேர்த்து வைக்கனும்ங்கற எண்ணம் சுத்தமா இல்லை, வேற ஒரு எண்ணத்தோட வந்திருக்கா, இவளை விட்டா நம்ம குடும்ப மானம் போயிடும், முதல்ல இவளை விரட்டனும்” என சொல்லியவன் மஹதியைப் பார்த்து

  

”ஏய் இப்ப நீ கிளம்பறியா இல்லை நானே உன்னை பிடிச்சி வெளிய தள்ளவா” என கேட்க அவளோ அதிர்ந்தாள்

  

”நீங்களா இப்படி பேசறது, உங்களோட கனிவான குணத்தை பார்த்து உங்க மேல ஆசைப்பட்டேன் ஆனா நீங்களே இப்படி என்கிட்ட கடுமையா நடந்துக்கறது பார்த்து என் மனசு வலிக்குது”

  

”நல்லா வலிக்கட்டும் உன்னை நம்பின எனக்கு துரோகம் செய்தப்ப எனக்கும் இப்படித்தான் வலிச்சது”

  

”அதுக்குதான் நான் மன்னிப்பு கேட்டேனே, இப்ப என்ன நான் வெளிய போகனும் அதானே ஓ போறேன் போதுமா” என கண்கள் கலங்க சொல்ல  வேங்கையனோ

  

”சந்தோஷம் கிளம்பு” என கத்த மஹதி கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி இரண்டடி எடுத்து வைக்க வீரசிங்கம் உள் நுழைந்தார்

  

”இரும்மா” என மஹதியை நிப்பாட்ட அவளே ஆச்சர்யப்பட்டு

  

”இல்லைங்க நான் போறேன் அதுதான் சரி” என்றாள்

  

”எது சரி எது தப்புன்னு சொல்ல வேண்டியது நானு” என கடுமையாகச் சொல்லியவர் ஜானகியைப் பார்த்து

  

”ஏம்மா ஜானகி இவளை உனக்கு தெரியுமா” என கேட்க அவளோ சற்று அச்சத்துடன் தெரியும்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.