“யார் எதை சொன்னாலும் இது உண்மையா, பொய்யா அப்படின்னு உன்னையே கேட்கனும். அடுத்ததா நீ கேட்டீயே எதுக்கு பொய் சொல்லனும்ங்குற கேள்வியைக் கேட்கனும். சொன்னவங்க பாடி லேங்குவேஜ் எப்படி இருந்துச்சுன்னு யோசிக்கனும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்! இப்போ, சேகரன் மேட்டருக்கு வருவோம். இந்த நர்ஸ் சொன்னது உண்மைன்னு எடுத்துப்போம். அப்போ அவங்க சொன்னது நமக்கு எப்படி ஹெல்ப் செய்யும்?”
“டாக்டர் பிரசாத் ஹாஸ்பிட்டல்ல சேகரன் வேலை செய்தான். அங்கே தான் பர்வீன் அட்மினிஸ்ட்ரேஷன் டிபார்ட்மென்ட்ல இருக்கா,” என்றாள் சத்யா யோசித்துக் கொண்டே...
“கரக்ட். அப்போ சேகரனை பர்வீனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு, சரியா?”
ஆம் என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டிய சத்யா,
“டாக்டர் கிருஷ்ணா அஹல்யா மேல இன்ட்ரஸ்ட் காட்டினது பர்வீனுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதனால அவளே சேகரன் கிட்ட அஹல்யா பத்தி தப்பான நியூஸ் பரப்ப சொல்லி இருக்கலாம்,” என சக்தி விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள்.
“பாஸிபிள்! அப்படி பர்வீன் செய்ததை புரிஞ்சுக்கிட்டு சேகரன் ப்ளாக்மெயில் செய்திருக்கலாம். இல்லைனா டபுள் க்ராஸ் செய்ய நினைச்சிருக்கலாம்!”
சத்யா யோசித்தாள்!
“அப்போ கூட பர்வீனால தனியா சேகரன் மாதிரி ஒருத்தனை அடிச்சு காயப் படுத்த முடியுமா சக்தி?”
“தனியா முடியாது. கிருஷ்ணா மாதிரி ஒருத்தர் துணை இருந்தா???”
“கடவுளே!!!!”