(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“ஆனால் ஒன்னு இடிக்குது சத்யா. கிருஷ்ணாவும் பர்வீனும் இதை செய்திருந்தா, அந்த மொட்டைக் கடிதங்களுக்கு என்ன அவசியம் வந்துச்சு? எல்லோரும் மறந்து போயிருக்க கேஸை திரும்ப ஞாபகப் படுத்த வேண்டிய அவசியம் என்ன? அப்படியே விட்டுடுறது தானே அவங்க இரண்டுப் பேருக்கும் நல்லது?”

  

“ஒரு வேளை அஹல்யா மேல அந்த அளவுக்கு கோபத்துல இருக்காங்களோ? அஹல்யா கல்யாணம் பத்தி நாம அன்னைக்கு டாக்டர் பிரசாத் கிட்ட பேசினோமே. அப்படி அஹல்யா சந்தோஷமா செட்டில் ஆக கூடாதுன்னு செய்றாங்களோ?”

  

“இருக்கலாம்! ஆனால் அஹல்யா வீட்டுல போய் இவங்க தேட என்ன இருக்கு?”

  

“இந்த சேகரன் விஷயத்துக்கும், திருடங்க விஷயத்துக்கும் லிங்க் இருக்கனும்னு என்ன அவசியம் சக்தி? இரண்டுக்கும் சம்மந்தமே இல்லாம கூட இருக்கலாமே?”

  

“நல்ல பாயின்ட்! குட் ஜாப் இன்டர்ன்!”

  

“தேங்க் யூ எக்ஸ்-போலீஸ்!”

  

சக்தி முறைக்க, சத்யா சிரித்தாள்!

  

“சக்தி, அஹல்யா கிட்ட ஷாலினியை பார்த்துக்க சொல்லிட்டு வந்தேன். இவரு வேற எப்போ வேணா வருவாரு. என்னை வீட்டுல ட்ராப் செய். நாளைக்கு காலைல நான் உன்னை வந்து மீட் செய்றேன்!”

  

“இதான் கல்யாணமான லேடீஸ் கூட வேலை செய்யும் போது வர தொல்லை! ஒரு ஃப்ளோல தொடர்ந்து வேலை செய்ய விட மாட்டீங்க!”

   

சக்தி ஜீப்பை கிளப்பினாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.