”ஏன் உன் மனசுல யாராவது இருக்காங்களா சொல்லு அவங்களோடவே உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்” என சொல்ல அவனோ மாதவியை நினைத்தான் ஆனால் மாதவிதான் அவனை விட்டு சென்றுவிட்டாளே அதனால் அவன்
”அப்படியெல்லாம் இல்லை தாத்தா”
”அப்புறம் என்ன நான் சொல்ற பொண்ணை நீ கல்யாணம் செய்துக்கனும்”
”முடியாது தாத்தா”
”இதப்பாரு இப்படியே இருக்காத, உன்னை சரியா வளர்க்கலைன்னு நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க எத்தனை நாள் நான் உயிரோட இருப்பேனோ, என் உசுரு போறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்கனும்னு ஆசைப்படறேன்”
”இவ்ளோ தூரம் பேசறிங்கன்னா நிச்சயம் பொண்ணையும் பார்த்து வைச்சிருக்கனுமே”
”ஆமாம் பார்த்துட்டேன்“ என சொல்ல அவனோ திடுக்கிட்டான்
”யாரு”
”கண்ணகி”
”எது கண்ணகியா” என அலறினான்
”ஆமாம்“
”முடியாது நான் அவளை கல்யாணம் செய்துக்க மாட்டேன்”
”அவளுக்கென்ன குறைச்சல் திறமையானவ புத்திசாலி நம்ம கல்லூரியை மாத்தினவ”