”உன்னை நான் புரிஞ்சிக்கிட்டேன் இனி பேச எதுவும் இல்லை நீ கண்ணகியைதான் கல்யாணம் செய்துக்கனும்”
”இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்”
”உன்கிட்ட நான் அனுமதி கேட்கலை கட்டளையிடறேன்”
”என்னை மன்னிச்சிடுங்க தாத்தா நான் அவளை கல்யாணம் செய்துக்க மாட்டேன்”
”இப்படி சொன்னாலாம் உனக்குப் புரியாது சரி உன் வழிக்கே வரேன், காலேஜ்ல இந்த முறை எல்லாரும் பாஸாயிட்டா நீ கண்ணகியை கல்யாணம் செய்துக்கனும்”
”கண்டிப்பா எல்லாரும் பாஸாக மாட்டாங்க அது எனக்கே தெரியும், இருந்தாலும் நீங்க இப்படி சேலன்ஜ் பண்றதால நானும் இதுக்கு சம்மதிக்கிறேன்”
”சரி ரிசல்ட் வரட்டும் பார்த்துக்கலாம் அப்ப நீ பேச்சை மாத்தக்கூடாது, அப்படி மாத்தி பேசின எனக்கும் உனக்கும் இருக்கற உறவை நான் முறிச்சிக்குவேன், உனக்கான சொத்தை உனக்கு தந்துடுறேன்“
”ப்ச் இப்படியெல்லாம் பேசற அளவுக்கு எதுவும் நடக்காது, எனக்குத் தெரியாதா காலேஜ் நிலைமை, கண்டிப்பா சில மாணவர்கள் பெயில் ஆவாங்க எனக்கு நம்பிக்கையிருக்கு” என உறுதியாக சொல்ல ஈஸ்வரமூர்த்தி மென்மையாக சிரித்தார்
”ஆமா இந்த கல்யாண விசயம் கண்ணகிக்கு தெரியுமா”
”தெரியாது உன் சம்மதத்துக்காகதான் காத்திருக்கேன், நீ சம்மதிச்சா அப்புறம் நான் அவள்ட்ட பேசிடுவேன்“
”அவளும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா”