வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே
”இதற்கான விளக்கத்தை யாராவது சொல்றீங்களா” என கேட்டதும்தான் தாமதம் ஆடிட்டோரியம் அலறும் அளவு அனைத்து மாணவர்களும் விளக்கம் கூறினார்கள்.
பிறரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர் பேச்சைக் கேட்க வேண்டாம். நம்மை மதிக்காவர்கள் இல்லத்திற்கு செல்லக் கூடாது. அனுபவஸ்தர்களான பெரியோரின் அறிவுரைகளை மறக்கக் கூடாது. எதற்கெடுத்தாலும் கோபப்படுபவரோடு சேரக் கூடாது. கல்வியறிவு தந்த ஆசிரியர் சம்பளத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கக் கூடாது. திருடர்களோடு கூட்டு சேரக்கூடாது. மனமே! வல்லமையால் புகழ் சேர்த்த வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.
அந்த விளக்கத்தைக் கேட்டு அவள் மாணவர்களை நினைத்து பெருமைப்பட்டாள்
”பரவாயில்லையே தேறிட்டீங்களே இனி உங்களை வழிநடத்தறது எனக்கு சுலபம்” என்றவள் வந்திருந்த ஆசிரியர்களிடம்