போதெல்லாம் அவள் கண்ணில் மின்னும் மின்னலும், அந்த முகத்தில் தோன்றும் கூடுதல் அழகும், வெட்கமும்...
நானும் அப்படி இருந்திருப்பேனோ????
சட்டென புகை வடிவமாக ஓர் ஆணின் முகம் தெளிவில்லாமல் அவள் சிந்தனையில் தெரிந்தது.
“எவ்வளவு நாளா இதுக்காக காத்திருக்கேன்னு உனக்கு தெரியாது... ஐ வான்ட் டூ கிஸ் யூ...”
அவளருகே அவன் நெருங்கி வர, கைகளால் அவனை தடுத்து,
“ப்ளீஸ்...!” என்றாள் அவள்.
“நிலா? நிலா? என்ன???? யார் கிட்ட பேசுற?”
நிலா திடுக்கிட்டு மிருதுளாவை பார்த்தாள்.
“நான் என்ன சொன்னேன்?”
“ப்ளீஸ்ன்னு சொன்ன...! என்ன ஆச்சு?”
அவள் உண்மையிலேயே அதை சொன்னாளா??? 'அவன்' சொன்னதும் கூட தத்ருபமாக தான் இருந்தது...
ஒருவேளை அது அவளின் வாழ்வில் முன்பு நிஜமாக நடந்ததோ????
மிருதுளா சொல்வதுப் போல் காதல் அவளின் வாழ்வில் இருந்திருக்குமோ???
“என்ன இரண்டுப் பேரும் கனவு கண்டுட்டு உட்கார்ந்திருக்கீங்க? நேரமாச்சு வேலையை ஆரம்பிங்க. அம்மா இன்னும் எழுந்திருக்கலையா??? நான் போய் எழுப்பி விடுறேன்...”