(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

இல்லாதவங்களுக்கு அப்பப்போ ஏதாவது கொடுங்க, தப்பில்லை... இது போல வரவங்க கிட்ட ஒரு ரூபா, இரண்டு ரூபா ஜாஸ்தியா போட்டு கூட பில்லை கொடுக்கலாம் தப்பில்லை...”

  

நிலா மடமட என பேச... மிருதுளா அவளை ஆச்சர்யமாக பார்த்தாள்.

  

என்ன அப்படிப் பார்க்குறீங்க?”

  

ஹ்ம்ம்ம்... இவ்வளவு யோசிச்சுப் பேசுறீயே ஒருவேளை நீயும் ஹோட்டல் நடத்திட்டு இருந்திருப்பீயோ????”

  

இருக்குமோ?????

  

நிலாவினுள் மீண்டும் புதிய கேள்விகள்...! பதில் தான் கிடைக்கவில்லை...

  

என்று தான் இதற்கெல்லாம் பதில் கிடைக்குமோ!!!!

  

🌼🌸❀✿🌷

   

ன்று நான்கு மணிக்கு மேல் ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் யாருமில்லை! மிருதுளா, நிலா, ராஜம்மாள் மூவரும் ஓய்வாக அமர்ந்த படி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

  

வெற்றி அன்றைய நாளின் வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான்...

  

அப்போது ஒரு கார் அவர்களின் ஹோட்டலின் முன் வந்து நின்றது. வெகு தூரம் பயணப்பட்டதை போல் கார் முழுக்க ஒரே புழுதி மயம்...

  

அந்தக் காரில் இருந்து இறங்கியவன், வெற்றி பவனினுள் வந்தான்.

  

சாரிங்க, நேரம் கெட்ட நேரத்துல வந்திருக்கேன். ஏதாவது சாப்பிட கிடைக்குமா? இந்த ஊருல உங்க ஹோட்டல் சாப்பாடு தான் நல்லா இருக்கும்னு சொன்னாங்க!”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.