“என்ன?”
“ஒரு கேஸ் விஷயம்!”
“நீங்க வாலன்டியர் ரிடையர்மென்ட் வாங்கிட்டீங்கன்னு நினைச்சேன்??”
“உண்மை தான். இது வேற!”
“எதுவா இருந்தாலும் ஈஸியா எடுத்துக்கோங்க சக்தி. லைஃப் இஸ் ஷார்ட்!”
சக்தி குழப்பம் தெரிந்த புன்சிரிப்பை பதிலாக கொடுத்தாள்.
“ஹுஹும்! இன்னும் உங்க முகம் தெளிவான மாதிரி இல்லை. இப்போ என் மேஜிக் பாருங்க. தயவு செஞ்சு என் கையை தள்ளி விடாதீங்க. ஜஸ்ட் ரிலாக்ஸ்!” சாந்ததுரை தன் ஆட்காட்டி விரல்களால் சக்தியின் இரண்டு பக்க நெற்றியிலும் வட்ட வடிவிலாக தேய்த்தான். ஒரு நிமிடம் கழித்து விரல்கள் எடுத்தான்.
“இப்போ எப்படி ஃபீல் செய்றீங்க?”
“வாவ்! மேஜிக்!!! எல்லா ஸ்ட்ரேஸும் போயிடுச்சு!” சக்தியின் உதடுகளில் புன்சிரிப்பு தோன்றி இருந்தது.
“என்னை கிண்டல் செய்றீங்கன்னு தெரியுது. ஆனாலும் உங்க முகத்துல ஸ்மைல் வந்திருக்கே. அதனால நோ ப்ராப்ளம்ஸ், கிண்டல் செய்துக்கோங்க!”
“உங்க வேலை எப்படி போகுது?”
“செட்டில் ஆயிட்டேன்னு தோணுது சக்தி. எல்லாமே பக்கா ப்ராசஸ். கரக்ட்டா இருக்கு. எந்த டைம்ல இருந்து எந்த டைம் வரைக்கும் நான் இன்சார்ஜ்ல இருப்பேன். எப்போ இருந்து அடுத்த