குலுக்கியதும் அவனுக்கு பிடித்திருந்தது. மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு சக்தி போர்ட் முன் நிற்பதை பார்த்தான். அவனுடைய தானாக முகம் மலர்ந்தது. அவள் பக்கத்தில் போய் நின்றான்.
“சக்தி மேடம் பேக் டு வொர்க்ன்னு புரியுது. நான் உங்களுக்கு என்னோட ஹெர்பல் டீ ரெடி செய்து எடுத்துட்டு வரேன்,’ என்றான்!
“தேங்க்ஸ் SD!” முகத்தை திருப்பாமலே சொன்னாள் சக்தி.
🌼🌸❀✿🌷
“ஹப்பா! இவ்வளவு பெரிய க்யூவா? இந்த அளவுக்கு கூட்டம் இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை!” சக்தி ஏ.ஜே.பி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் முன்பு இருந்த கூட்டத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.
“இந்த ஹாஸ்பிட்டல் கேம்ப் ரொம்ப ஃபேமஸ் சக்தி. சுத்தி இருக்க எல்லா ஊருல இருந்தும் மக்கள் வருவாங்க. இது நார்மல் தான்!” சத்யா அவளுக்கு விளக்கம் கொடுத்தாள்.
“இவ்வளவு பெரிய லைன்ல நின்னு டெஸ்ட் எடுத்துக்குற பொறுமை எல்லாம் எனக்கு கிடையாது சத்யா. நான் கிளம்புறேன்!”
“என்ன எக்ஸ் போலீஸ் இப்படி மொக்கையா பேசுறீங்க? நாம இங்கே செக் அப்க்கு வரலை!”
“அப்புறம்?”
“வேற வேலை இருக்கு. பர்வீன், டாக்டர் கிருஷ்ணா பத்தி இன்னும் தகவல் சேகரிக்கலாம். பர்வீன் கிட்ட நேரடியா பேசலாம்!”
“சூப்பர், மேடம் இன்டர்ன்! ஆனால் இவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல பர்வீன் இரண்டு வார்த்தை பேசினா கூட ஆச்சர்யம் தான்!”