”சரி மாமா நான் உங்களை தடுக்கலை வர்ற வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்த நாள்”
”சரி அதுக்கு இப்ப என்னங்கற”
”அன்னிக்கு நாம கல்யாணம் செய்துக்கலாமா மாமா”
”எது கல்யாணமா? நானே உன்னை வேணாம்ங்கறேன் நீ பாட்டுக்கு என்னென்னவோ உளறி வைக்கற”
”இல்லை மாமா கல்யாணம் ஆகாம நான் இங்க தங்கினா ஊர் தப்பா பேசும்”
”ஏற்கனவே இந்த வீட்டு மானம் மரியாதை எல்லாம் காத்துல பறக்குது உன்னால என்னைதான் எல்லாரும் தப்பா பேசறாங்க”
”அதுக்குதான் சொல்றேன் மாமா நமக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னா யாரும் நம்மளை ஒரு கேள்வி கேட்கமாட்டாங்க மாமா”
”இதப்பாரு என்னை தொல்லைப் பண்ணாத நான் கிளம்பனும் வழியை விடு“
”பதில் சொல்லிட்டுப் போ மாமா“
”என்னடி“
”வர்ற வெள்ளிக்கிழமை நமக்கு கல்யாணம் அதுக்கான ஏற்பாடுகளை நான் செய்யவா“
”என்னவோ செய் என்னை விடு” என சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்.
அவர்களது பேச்சைக் கேட்ட பரிமளாவிற்கு கோபமே வந்தது, மகன் எப்போது கிளம்புவான் என பார்த்தபடி இருந்தவர் அவன் சென்றதும் ஜானகியை பிடித்து உலுக்கினார், என்ன செய்தாலும் திட்டினாலும் அவள் அசராமல் வெள்ளிக்கிழமை தனக்கு திருமணம் என