”அப்பா எனக்கு வாழவே பிடிக்கலைப்பா”
”சந்தோஷம், நான் இப்ப ஒரு வேலையா வெளியூர் போறேன், வர்றதுக்கு 2 நாள் ஆகலாம், அதுவரைக்கும் வீட்டையும் நிலத்தையும் பார்த்துக்கடா”
”எது நானா நான் எப்படி வீட்டுக்கு எல்லாம், நான் போக மாட்டேன் நிலத்தை வேணா பார்த்துக்கறேன்”
”படவா ராஸ்கல் என்ன என்னையே எதிர்த்து பேசற அளவுக்கு வந்துட்டியா“
”பின்ன உங்க பேச்சைக் கேட்டு ஜானகி நான் கட்டின தாலியை அறுத்துட்டுப் போயிட்டா இப்ப உங்களுக்கு சந்தோஷமா“
“ஓ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்”
”அப்பா” என கோபத்தில் வெடித்தான் வேங்கையன் அவனின் முதுகில் இரண்டடி கொடுத்துவிட்டு
”அறிவில்லாதவனே, என்னவோ ஜானகியும் நீயும் ஒண்ணு மண்ணா புழங்கின மாதிரி நான் வந்து உங்களை பிரிச்ச மாதிரி பேசி வைக்கற, என் கண்ணு முன்னாடியே அந்த மூர்த்தி பயகிட்ட எப்படியெல்லாம் பேசி கெஞ்சி சே அவளை போய் உனக்கு கல்யாணம் செஞ்சி வைச்சி நான் பெரிய தப்பு பண்ணிட்டேன், செஞ்ச தப்புக்கு நியாயம் சேர்க்கதான் தாலி கழட்ட வைச்சேன், இதப்பாருடா நான் செஞ்சது தப்பில்லை உன் நல்லதுக்குதான் அவ்வளவும் செய்தேன், அதை நீ இப்ப புரிஞ்சிக்கலைன்னாலும் கூடிய சீக்கிரம் புரிஞ்சிக்குவ”
”அதுக்காக மஹதியை நான் ஏத்துக்கனுமா”
”ஏத்துக்காட்டி போ எனக்கென்ன வந்தது இதப்பாருடா என்னிக்கிருந்தாலும் அவள்தான் நம்ம வீட்டு சின்ன மருமகள்”