(Reading time: 23 - 45 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”என்ன மாமா சிரிக்கிறீங்க”

  

”நீ வந்ததும் என் மகன் உன்னைப் பார்த்து பாடினப்பவே எனக்கு உன்னை பிடிச்சிப் போச்சி, இருந்தாலும் ஊர்வாய் சும்மாயிருக்காதே நானும் உனக்கு ஆதரவா பேசினா தேவையில்லாம உனக்கு கெட்டப்பேர் வரும், அதுக்கு பயந்துதான் உன்கிட்ட அப்படி கடுமையா நடந்துக்கிட்டேனே தவிர, மத்தபடி உன்மேல எனக்கு எந்த வெறுப்பும் இல்லை, எங்க நீ பழி பாவத்துக்கு ஆளாயிடக்கூடாதுன்னுதான் உன்னை போக சொன்னேன், எனக்கும் உன்னை அனுப்ப மனசில்லை, வேங்கையன் மட்டும் உன்னை ஏத்துக்கிட்டு இருந்திருந்தா நல்லாயிருக்கும்”

  

”ஆனா மாமா அவர் பக்கமும் நியாயம் இருக்கே, நான் அவருக்கு செய்தது அநியாயம்தானே”

  

”நியாயம் அநியாயம் பேசற இடத்தில நீயும் இல்லை, இங்க வேற யாரும் இல்லை, விதிபடி எல்லாம் நடக்குது இல்லைன்னா மூர்த்திக்காக பேசப்பட்ட நீ எதுக்காக இங்க வரனும், ஜானகியை வேங்கையனோட சேர்க்க நினைச்ச உனக்கு ஏன் வேங்கை மேல காதல் வரனும், சொல்லு, எல்லாமே விதிதான்”

  

”இருக்கலாம் மாமா எனக்கு வேங்கையனை நினைச்சாதான் பயமாவும் பாவமாவும் இருக்கு”

  

”அவன் மேல பயமும் பாவமும் படாத, அப்புறம் உன்னால அவனை காதலிக்க முடியாது, விட்டா நீயே அவன் மேல பாவம் பார்த்து ஜானகியை அவனோட சேர்த்து வைச்சிடுவ போல இருக்கே”

  

”இப்ப மட்டும் ஜானகி மூர்த்தியை விட்டு வந்தாள்னா நான் நிச்சயம் அவளை வேங்கையன்கூட சேர்த்து வைச்சிடுவேன் மாமா”

  

”அப்போ உன்னோட காதல் என்னாகிறது”

  

”என் காதலை விட வேங்கையனோட காதல் புனிதமானது”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.