”ப்ச் அவனோட முறைப்பொண்ணு மேல உரிமையிருந்தது சின்னப்ப இருந்தே பேசி பழகி வந்தவன் அவள் மனைவியா அமைஞ்சா நல்லாயிருக்கும்னு நினைச்சானே தவிர அவளை ஒண்ணும் இவன் காதலிக்கலை, முறைப்பொண்ணுக்கு செய்ய வேண்டியதை செய்தான் அவ்ளோதான், ஆனா வேங்கையன் மனசை மாத்தறது அவ்ளோ சுலபம் இல்லை, கஷ்டம்தான் ஆனா அது உனக்கு பெரிசா கஷ்டமாயிருக்காதுன்னு நினைக்கிறேன்”
”எனக்கும் உறுதியா சொல்ல முடியலை மாமா“
”நாங்க இருக்கோம் துணைக்கு, நாளைக்கே நான் திருச்சிக்குப் போறேன் 2 நாள் இருந்துட்டு வரேன், வீட்டையும் நிலத்தையும் பார்த்துக்கறது அவனோட பொறுப்பு அவனை பத்திரமா பார்த்துக்கறது உன்னோட பொறுப்பு சரியா” என சொல்ல அவளும் சரியென தலையாட்டினாள்
எப்படியோ பேசி பேசியே அவளின் கவலையை போக்கியவர் அவளை அழைத்துக் கொண்டு சாப்பிடச் சென்றார், வீரசிங்கம் மஹதி மங்களம் மூவரும் கவலைகள் மறந்து சாப்பிட்டு முடித்தனர்.
”அத்தை அவர் எங்க போனார்ன்னு தெரியலையே அத்தை பசிக்காதா அவருக்கு”
”அவனை கொஞ்சம் தனியா விடு, அவனோட கவலையை போக்கிட்டு தன்னால வீட்டு நினைப்பு வரும்போது வருவான், இப்ப அவனை தேடி நாம போனா நமக்குதான் கஷ்டம், அவனா வருவான் அப்படி வரும் போது பார்த்துக்கலாம், அவனை நினைச்சி நீ கவலைப்படாத” என சொல்ல அதில் அவளும் அமைதியானாள்.
மறுபக்கம் ஜானகியோ மூர்த்தியின் வீட்டில் அடமாக அமர்ந்துவிட்டாள், அவளை எப்படி எப்படியே திட்டி பார்த்தும் விரட்டி பார்த்தும் அவள் அசரவில்லை, அவளின் இந்த உறுதியைக்கண்டு முதல் முறையாக மூர்த்தி பயந்தேப் போனேன், தனது அறையில் தன் தாய் தந்தையுடன் ரகசியமாகப் பேசினான்
”அப்பா இது வேலைக்கு ஆகாது, ஒண்ணு பண்றேன் நானே நேரா மஹதி வீட்டுக்குப் போய்