மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 46 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சாந்ததுரையின் கன்சல்டிங் அறை பெரிதாக இருந்தது!
“என்ன இது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரூம் மாதிரி இருக்கு?” சத்யா சக்தி மனதில் நினைத்ததை வெளிப்படையாக கேட்டே விட்டாள்.
“நான் இந்த ஹாஸ்பிட்டல்ல டாக்டர் மட்டுமில்லை, பாதி ஓனர். அதான் இந்த ஸ்பெஷல் ரூம்,” என்றான் சாந்ததுரை!
“இன்டீரியர் நல்லா இருக்கு. இங்கேயே பேஷண்ட்ஸ் பார்ப்பீங்களா?” சக்தி அவனிடம் வினவினாள்!
“யெஸ். ப்ரைவசி தேவைப்பட்டா அங்கே இன்னொரு ரூமும் இருக்கு. எக்ஸ்-ரே, ஸ்கானுக்கு எல்லாம் தனி டிவிஷன் இருக்கு. மத்தபடி இங்கே பார்க்க எனக்கான டிவைசஸ் இது.” சாந்ததுரை சக்திக்கு அங்கிருந்த மருத்துவ சாதனங்களை காட்டி விளக்கினான்.
சக்தி அந்த ஹாஸ்பிட்டல் பற்றி பொதுவான பல விபரங்களை கேட்டு தெரிந்துக் கொண்டாள்.
சில நிமிடங்கள் போனப் பிறகே, சத்யா அமைதியாக இருப்பது புரிந்து, அவள் என்ன செய்கிறாள் என்றுப் பார்த்தாள் சக்தி. சத்யா ஜன்னல் பக்கம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி எதை பார்க்கிறாள் என்று சக்தியும் எட்டிப் பார்த்தாள். அங்கே இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் சப் இன்ஸ்பெக்டர் அபினவிடம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான்.
“சத்யா, இது எல்லாம் அதிகமா தெரியலை? வீட்டுல பார்த்த அதே தென்றல்வாணன் தான் இங்கே நிக்குறதும். போதும் நீ பார்த்தது!” சொல்லி முடித்த போது, சக்திக்கே அவளா இப்படி கிண்டல் செய்து பேசுவது என்று அதிசயமாக இருந்தது!
“வீட்டுல பார்த்தா என்ன? என் ஹஸ்பன்ட் எங்கே பார்த்தாலும் என் கண்ணுக்கு குளிர்ச்சியா, கவர்ச்சியா தான் தெரியுறார். ஆனால் அவரும் அபினவும் பேசுற விதம் சரியா இல்லை. வா அங்கே போய் என்னன்னு கேட்போம்,” என்றாள் சத்யா.