“அபினவ்!” தென்றல்வாணனின் குரல் இப்போது உயர்ந்திருந்தது.
“இங்கே இருந்து தான் எடுத்தேன் சார்!”
தென்றல்வாணன் இந்த பத்திரத்தின் வேறு பக்கங்கள் எங்கேயாவது இருக்கிறதா என்று தேடினான். செய்திதாள்கள், கிழிக்கப்பட்ட ரசீதுகள் என்று குப்பை இருந்தது. வேறு எதுவும் இல்லை. மீண்டும் ஒருமுறை கான்ஸ்டபில்களிடம் சொல்லி எந்த இடம் முழுக்க தேட வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டான்.
“அபினவ், எனக்கு வேற ஒரு வேலை இருக்கு. நான் ஸ்டேஷன் கிளம்புறேன். உன் சொந்த பிரச்சனைகளை யோசிச்சுட்டு இங்கே கேம்ப்ல கோட்டை விட்டுறாத. ஒழுங்கா எல்லாத்தையும் கவனிச்சுக்கோ. வேணும்னா கான்ஸ்டபில் விஜயனை வரச் சொல்லு. ஈவ்னிங் செவன்க்கு முன்னாடி ஸ்டேஷன் வந்திரு. எல்லோரும் வி.ஐ.பி பந்தோபஸ்த் போகனும்.” கட்டளை இடுவதுப் போல சொன்னான் தென்றல்வாணன். அதற்கு மேலே அங்கே நிற்காமல் கிளம்பியும் சென்றான்.
அபினவிற்கு கோபமாக வந்தது. ஆனாலும் சத்யா பற்றி இன்ஸ்பெக்டரிடம் அப்படி கேட்டது ரொம்பவும் அதிகப்படி என்று அவனுக்கே இப்போது தோன்றியது!
அஹல்யாவை எப்படி இந்த வழக்கில் இருந்து காப்பாற்றுவது?
அவன் குழம்பி கொண்டு நிற்க, “அபி, அவர் எங்கே? இங்கே தானே இருந்தார்?” என்ற கேள்வியுடன் சத்யாவும், சக்தியும் அவன் பக்கம் வந்தார்கள்.
“சத்யாக்கா சாரிக்கா,” என்றான் அபினவ்!
“எதுக்கு?” சத்யா புரியாமல் வினவினாள்!
“அஹல்யாக்கு புதுசா பெரிய பிரச்சனை வந்திருக்குக்கா. இங்கே கீழே ஒரு ஸ்டாம்ப் பேப்பர்