(Reading time: 7 - 14 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

அவர்கள் இருவரும் தன்னிடம் பேசாமல் அவர்களுக்குள் ரகசியம் பேசிக் கொள்கிறார்கள் என புகார் செய்வதைப் போல தொண்டையை சரி செய்துக் கொண்டான் சாந்ததுரை.

  

“சாரி, டாக்டர் சார். உங்களை மறந்துட்டோம். உங்க கார்ட் இருந்தா கொடுங்க. நெக்ஸ்ட் டைம் ஹாஸ்பிட்டல்ல ஏதாவது வேணும்னா உங்கப் பெயரை சொல்லலாம். இல்ல உங்களுக்கே நேரா ஃபோன் செய்தும் கேட்கலாம்,” என்றாள் சத்யா.

  

“உங்களுக்கு இல்லாத உதவியா சிஸ்டர்! இந்தாங்க என் கார்ட்.” சாந்த துரை அவனுடைய விசிட்டிங் கார்டை இரண்டு பெண்களுக்கும் எடுத்துக் கொடுத்தான்.

  

🌼🌸❀✿🌷

   

தென்றல்வாணனும், அபினவும் உண்மையாகவே சீரியஸாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

  

சிறிய ஊர் என்பதால் மதியூரில் நடக்கும் இதுப் போன்ற இலவச மருத்துவ முகாம்களுக்கு தென்றல்வாணனே முன் நின்று உதவுவான். அவன் மீது அந்த ஊரு மக்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் தெரிந்துக் கொண்டு, கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கும் நிகழ்ச்சிகளில் பொதுவாக அவனை அழைப்பது இப்போதெல்லாம் வாடிக்கை ஆகி இருந்தது. எல்லா இடத்திற்கும் தென்றல்வாணன் போக முடியவில்லை என்றாலும் அபினவையோ, கான்ஸ்டபிலையோ அனுப்பி வைப்பான்.

  

டாக்டர் பிரசாத் நடத்தும் இதுப்போன்ற முகாம்களுக்கு கூட்டம் அதிகமாக வரும். அதற்காக தான் இன்று தென்றல்வாணனே நேரில் வந்திருந்தான். சிறிது நேரம் இருந்து அனைத்தையும் மேற்பார்வை பார்த்து விட்டு அபினவிடம் பொறுப்பை ஒப்படைத்துப் போக முடிவு செய்திருந்தான்.

  

மருத்துவ முகாமிற்கு பயன்படுத்தும் மருந்துகள் ஹாஸ்பிட்டலின் கோடவுனில் இருந்தது. அதை ஹாஸ்பிட்டல் சிப்பந்திகள் தூக்கி வருவதை கவனித்தான் தேன். அபினவையும் அழைத்துக் கொண்டு அவர்களுக்கு உதவ சென்றான். மருந்துகளை எல்லாம் எடுத்து முடித்த

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.