வெளியேறி சென்றுவிட மஹதிக்கு மனதில் வெறுமையே நிலவியது, அனைத்தும் தன்னால்தான் என்ற குற்ற உணர்ச்சி மெதுமெதுவாக அவளை ஆட்கொண்டது.
உண்ணக்கூட மனமின்றி கலங்கிய கண்களுடன் இருந்தாள் மஹதி, மங்களம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் கேட்கவில்லை
”இல்லை அத்தை நடந்ததுக்கு ஒருவகையில நான்தான் காரணம் நான் இங்க வந்திருக்க கூடாது நான் போறேன் அத்தை”
”எங்க போற இதுதான் உன் வீடு நீ இங்கதான் வாழ்ந்தாகனும்“
”இல்லை அத்தை என்னால சத்தியமா முடியாது அத்தை, அவரே என்னை வெறுக்கறாரு அத்தை”
”வெறுக்கட்டும் என்ன இப்ப“
”அத்தை” என்றாள் அதிர்ச்சியுடன்
”ஜானகியை அவன் விரும்பினான் இப்ப வெறுக்கிறான் உன்னை இப்ப வெறுக்கிறான் கொஞ்ச நாள் போனா உன் மனசை புரிஞ்சிக்கிட்டு உன்னை விரும்புவான் நம்பு“
”ஜானு வாழ்க்கையை நான் அழிச்சிட்டேன், சுயநலமா யோசிச்சி என்னோட காதலுக்காக அவளோட வாழ்க்கையை நான் புதைகுழியில தள்ளிட்டேன்“
”அட என்னம்மா நீ சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க, நீ வரலைன்னாலும் ஜானகி வேங்கையனை விட்டு போகத்தான் போறா, அவள் மூர்த்தி கூடதான் வாழ்வேன்னு முடிவு எடுத்தபின்னாடி யாராலயும் அவளை தடுத்து நிறுத்த முடியாது, பார்த்தல்ல அவள் இங்கிருந்து கிளம்பி அவள் வீட்டுக்குப் போகாம நேரா மூர்த்தி வீட்டுக்குப் போயிருக்கா, இதுல இருந்து உனக்கு தெரியலை அவளைப்பத்தி”
”ஆனா மூர்த்தி மோசமானவன் அவனை பத்தி தெரியாம அவள் போயிட்டாளே”