”ப்ச் வான்னா வரனும் எழு ம்” என அதட்டி உருட்டி அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார், அதற்குள் மக்கள் அனைவரும் கலைந்து சென்றிருந்தார்கள்.
வீட்டிற்குள் வந்த மஹதியோ வேங்கையனைப் பார்த்தாள், அவன் இன்னும் அதே நிலைமையில் இருக்க மங்களமோ வீரசிங்கத்திடம்
”என்னங்க கோயில்ல நல்ல தரிசனம்ங்க, முன்னாடி நான் ஒரு வேண்டுதல் வைச்சிருந்தேன், அதை நிறைவேத்திட்டு வந்துட்டேன், அப்புறம் சமையல் தயாரா இருக்கு சாப்பிடறீங்களா” என இயல்பாக கேட்க அவரும் வெகு இயல்பாக
”சாப்பிடறேன் நிலத்துக்கு வேற போகனும் எல்லாம் எடுத்து வை கைகால் அலம்பிட்டு வரேன்” என சொல்லிவிட்டு வேங்கையனை பார்த்து எழுப்பினார்
”வேங்கை எழு சாப்பிடலாம் வா” என அழைக்க அவனோ முடியாது என தலையாட்டியபடியே அவன் கையில் இருந்த தாலியை பார்த்தபடி இருக்க மங்களம் பார்த்தார், கோபத்தில் அந்த தாலியை வெடுக்கென வாங்கிக் கொள்ள அவனோ கத்தினான்
”என்னடா, பேசாம வாடா சாப்பிடலாம், அவளே நீ வேணாம்னு போயிட்டா உனக்கென்ன கேடு வந்து சேரு” என அதட்டிவிட்டு செல்ல வீரசிங்கமும் தன் மனைவியுடன் சென்றார்.
தனியாக இருந்த வேங்கையனிடம் வந்தாள் மஹதி, அவளைக்கண்டதும் கொலைவெறியுடன் ஒரு பார்வை பார்த்து
”இப்ப உனக்கு சந்தோஷமா” என கேட்க அவளோ
”இல்லை இப்படியாகும்னு நான் எதிர்பார்க்கலை“
”நீ நினைச்சது நடந்துடுச்சி, அதுக்காக உன்னை நான் ஏத்துக்குவேன்னு தப்புக்கணக்கு போடாத, இந்த ஜென்மத்தில நீ எனக்கு தேவையில்லை, என்னிக்குமே நான் உன்னை ஏத்துக்க, மாட்டேன் உன்னை மன்னிக்கவும் மாட்டேன்” என பொங்கிவிட்டு அவன் வீட்டைவிட்டு