(Reading time: 7 - 13 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

ஸோ மச்...!” என்றான் பாசத்துடன்!

  

அவன் சொன்னதைக் கேட்டு ராஜத்தின் முகம் கொஞ்சம் இளகியது...

  

“ஏன் அண்ணா, அமெரிக்கால பப்பில தான் காஃபி விக்குறாங்களா?” வர்ஷா வேண்டுமென்றே அண்ணனை 'போட்டுக் கொடுத்தாள்'!

  

ராஜம் அதற்கு பொங்கி எழும் முன், விக்கிராந்த், “ஹே வர்ஷ்! வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்?” என தண்மையாகவே தங்கையிடம் வினவினான்!

  

“ஜான்வி அக்கா இரண்டு நாள் முன் பேசினாங்க! அவங்களுக்கு நீ ஐஃபோன் வாங்கிட்டு வந்திருக்கீயா?”

  

“ஆமாம், என்கிட்டே தான் இருக்கு. அதனால என்ன?”

  

“முடிஞ்சா உன்னை ஏர்போர்ட்டிலேயே வந்து மீட் செய்யலாமேன்னு ஃப்ளைட் டைம் கேட்க ஃபோன் செய்தாங்க... அப்போ தான் உன் வண்டவாளம் எல்லாம் வெளியே வந்துச்சு!”

  

“வர்ஷ், நாம தனியா இதைப் பற்றி பேசலாமே!”

  

விக்கிராந்த் அதை சொல்லி வாயை மூடும் முன், “நீ சும்மா இருடா... நீ சொல்லு வர்ஷா என்ன சொன்னா ஜான்வி?” என வினவினாள் ராஜம்!

  

“வேற ஏன்ன, உங்க சீமந்த புத்திரனுக்கு சீக்கிரமே கால்கட்டு போட உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க... ஐயா அங்கே வீகென்ட் முழுக்க பப் தானாம்... பீர், டேன்ஸ்ன்னு ஒரே என்ஜாய்மென்ட்டாம்...”

  

ராஜம் முறைக்க, கணபதி நம்ப முடியாமல் மகனை பார்த்தார்...

  

சென்னையில் ஏதாவது செய்தால் தான் போட்டுக் கொடுப்பார்கள் என்று நினைத்தால், யூ.எஸ்ஸில் இருந்த போது நடந்ததே இவ்வளவு தூரம் வந்து விட்டதா?!?! ஏதாவது சொல்லி

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.