(Reading time: 24 - 47 minutes)
Chinna marumagal
Chinna marumagal

அதுவரைக்கும் நீ விடாத போ இந்தா பிடி” என அவளின் கையில் கட்டாயமாக டீ டம்ளரை நீட்ட அதை வாங்கிக் கொண்டு ஜானகியை பார்க்க அவளோ வெறுப்பாக முகத்தை திருப்பிக் கொள்ள அதைக்கண்டு மஹதி வருந்த மங்களமோ

  

”அடியேய் உனக்கு என்னடி இங்க வேலை, எதுக்கு என் மருமகளை பார்த்து முகத்தை திருப்பற, அவ்ளோ அசிங்கமாவா அவள் நடந்துக்கறா, உன்னை பார்த்துதான் ஊரே காரிதுப்புது, நீ செய்த காரியத்தை யாராவது செய்வாங்களா முதல்ல இங்கிருந்து போடி போ” என விரட்ட அவளோ வெறுப்பாக அவ்விடம் விட்டு சென்றாள், அவள் சென்றதும் மஹதி வேங்கையனை தேடிச் சென்றாள்.

  

வேங்கையனோ குளித்து முடித்து வெளியேறி வர எதிர்பட்ட ஜானகியோ

  

”என்னை மூர்த்தி மாமா வீட்ல விட்டுடுங்க” என சொல்ல அவனோ

  

“இன்னும் மூர்த்தி வரலை, அவன் வந்தா தகவல் தரச்சொல்லி ஆளை விட்டிருக்கேன், அவங்க வீடு திறந்தபின்னாடி உன்னை கூட்டிட்டுப் போய் விடறேன் அதுவரைக்கும் இங்கயே இரு”

  

”எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை”

  

”தெரியும் நான் இருக்கறதாலதானே”

  

”இல்லை உங்கம்மா என்னை திட்டறாங்க“

  

”அவங்க பேச்சுக்கு நீ ஏன் போற, உன் ரூம்லயே இரு உனக்கு வேண்டியது தானா தேடிவரும், வேலைக்காரிக்கிட்ட சொல்லிட்டுப் போறேன்”

  

”போறதா நீங்க போனபின்னாடி எனக்கு இங்க ஆபத்து நடந்தா என்ன செய்றது”

  

”உனக்கு ஒண்ணும் ஆகாது பயப்படாத” என சொல்லும் போதே டீயுடன் வந்து நின்ற மஹதியோ வேங்கையனிடம்

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.