”என்னால முடியலை ஆன்ட்டி ரொம்ப கஷ்டமாயிருக்கு” என சொல்ல குபேரனோ மங்களத்திடம் சென்று
”ஜானகி எங்க” என கேட்க அவரோ
”அவளோட ரூம்ல இருக்கா” என சொல்ல
”கவலைப்படாதீங்க நான் அவளை கூட்டிட்டு போறேன், இனி எப்பவும் அவள் இந்த வீட்டுக்கு வரமாட்டா” என சொல்லிவிட்டு ஜானகியை தேடிச் சென்றார்.
அதற்குள் வேணியும் மஹதியை சமாதானம் செய்யலானார் குபேரனோ ஜானகியை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்
”அப்பா என்னப்பா செய்றீங்க”
”வாயை மூடு, உனக்கென்ன வீடா இல்லை அங்க வெளிய அனுப்பினா இங்க வந்து தங்கற அறிவில்லை உனக்கு, மேலும் மேலும் எதுக்கு எங்களை அவமானப்படுத்தற”
”என்னைத்தான் நீங்க பொண்ணே இல்லைன்னு சொல்லிட்டீங்கள்ல அப்புறம் எப்படி உங்க வீட்டுக்கு வர்றது”
“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை எதுல ரோஷம் இருக்கனுமோ அதுல இல்லை கிளம்பு வா”
”இல்லை நான் வரலை”
”அடிவாங்காத நீ செய்த வரைக்கும் போதும் இனியாவது மஹதியை நிம்மதியா இருக்க விடு வேங்கையனை விட்டுட்டுப் போனல்ல அது அப்படியே இருக்கட்டும் நீ வா”