”நீ ஏன் அவளை வேத்தாளா நினைக்கற நம்ம சொந்தம்தானே”
”போதும்டா போதும், சொந்தம் விட்டுப்போக கூடாதுன்னு இவளை உனக்கு கட்டிவைச்சி பெரிய தப்பு செய்துட்டோம், நீ வேணாம்னு தாலியை தூக்கி எரிஞ்சிட்டு போனவளை இப்படி வீட்ல உட்கார வைச்சிருக்கியே, ஊர் தப்பா பேசாது”
”ஊர் வாயை நான் மூடிக்கிறேன், இப்ப உன் வாயை மூடிக்க” என சொல்ல அதில் மங்களமே ஆடிப்போய்விட்டார். மஹதியோ மங்களத்திடம்
”அத்தை வாங்க நிலைமை நமக்கு சாதகமா இல்லை தேவையில்லாம நீங்க ஏன் அவர் கொட்டற வார்த்தைகளை சுமக்கனும், வாங்கத்தை போகலாம்” என சொல்ல மங்களமோ தன் மகனிடம்
”வேங்கை ஜானகிக்காக நீ இழந்தது அதிகம், இனியும் இழக்காத, சின்ன மருமகளைப் பாரு உனக்காகவே இருக்கா இவளையும் இழந்துடாதடா” என சொல்லிவிட்டு அவர் மஹதியுடன் சென்றுவிட வேங்கையன் நீண்ட பெருமூச்சுவிட்டு ஜானகியைப் பார்த்து
”நீ போ உன் ரூமுக்கு போ, நான் போய் மூர்த்தியோட அப்பா அம்மா என்ன ஆனாங்கன்னு பார்த்துட்டு வரேன்” என சொல்ல அவளும் சரியனெ சென்றுவிட வேங்கையனும் வீட்டை விட்டு கிளம்பி மூர்த்தியின் சொந்த பந்தங்களிடம் விசாரித்து ஒருவழியாக மூர்த்தியின் பெற்றோர் சிவகங்கையில் இருக்கும் விசயம் தெரிந்ததும் உடனே அதைப்பற்றி ஜானகியிடம் சொல்ல வந்தான்.
மறுபக்கம் ஜானகி மீண்டும் வேங்கையன் வீட்டில் இருக்கும் விசயம் அறிந்த குபேரனும் வேணியும் துடித்துப் போனார்கள், அவசரமாக கிளம்பி வேங்கையன் வீட்டிற்கு வந்தார்கள். அங்கு சோக தேவதை போல அமர்ந்திருந்த மஹதியையும் கவலையே உருவாக அமர்ந்திருந்த மங்களத்தையும் கண்டு கலங்கினார்கள்
”மஹதி” என வேணி அழைக்க மஹதியோ வேணியைக் கண்டதும் ஓடிச் சென்று அழுகையுடன் அவரை அணைத்துக் கொண்டு